கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? WHAT SHALL WE DO WITH THIS JESUS CALLED CHRIST? 64-0126 (இயேசு நம் கரங்களில்) ரமதா இன், பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ...?... நான் துரிதமாக செல்ல விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் யாவரும் சபையில் இருந்து களைப்பாக இருக்கிறீர்கள் (நன்றி, ஐயா), இன்றைக்கு சபையில் இருந்து களைப்பாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும், சகோதரர் டீமாஸ் ஷகரியான் அவர்களுக்கு என் நன்றியுணர்வை வெளிப்படுத்த இத்தருணத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 2. [ஒலிநாடாவில் காலியிடம்] இந்தக் குழுக்களின் கீழ்... பெந்தெகோஸ்தேகாரர்களாக ஒரு போதும் கூடிவருவதில்லை. அங்கே அதிக வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாம் பொதுவான காரியங்களைக் கொண் டிருக்கும் ஒரு இடம் உண்டு, அதுதான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின்கீழ், அங்கே தான் நாம் பொதுவான காரியங்களைக் கொண் டிருக்கிறோம். எவ்வாறாயினும், நாம் கூடி வருவதற்கான தேவனுடைய வழி அதுவே. சிந்தப்பட்ட இரத்தத்தின்கீழ் மட்டுமே (அல்லா மல்), தேவன் மனிதனைச் சந்திப்பதாக வாக் குத்தத்தம் செய்துள்ள வேறு எந்த இடமும் கிடையாது. "3. நேற்றிரவு நம் சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள், "" அவன் இருதயத்திலிருந்து தண் ணீருள்ள நதிகள் ஓடும்"" என்று அந்த அற்புத மான வாக்குமூலத்தைக் குறித்து இங்கு கூறின போது, நான் அதைப்பற்றி சிந்தித்துக் கொண் டிருந்தேன். அம்மகத்தான... அவர் எப்படியாக அதை பேசினார், “அவன் உள்ளிருந்து, தண் ணீருள்ள இந்த நதிகள் அதிவேகத்தோடு பாய்ந் தோடும்"" என்று அவர் கூறினார் என்று நம்பு கிறேன், (அதைக்) குறித்துதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். " "4. அது ஒரே தண்ணீரின் நதிகள் என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ""நதிகள்,"" பன்மை; ""தண்ணீர்,” ஒருமை. ""தண் ணீர்களுள்ள நதிகள்"" அல்ல; மாறாக, தண் ணீருள்ள நதிகள்,” ஒரே ஆவி. ""ஒரே ஆவியி னாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்."" அவரி லிருந்து தேவனுடைய நன்மைகளும் கிருபை யும் பாய்ந்தோடுகிறது. " 5. இப்போது, கலிபோர்னியாவிலிருந்து வந்துள்ள ஜனங்களே, அடுத்த வாரம் தொடங்கி நாங்கள் அங்கே உங்கள் மாகாணத்தில் இருப்போம் என்று நம்புகிறேன். அதன்பிறகு நாங்கள் வெளிநாடுகளில் (கூட்டங்களைத்) தொடங்கும் வரை ஜார்ஜியா, லூசியானா, புளோரிடா வழியாக தொடர்ந்து போகிறோம். 6. கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர் வதிப்பாராக. இசை வாசித்த இந்தச் சிறு பெண்களையும், நான் சந்தித்த இந்த அருமை யான மனிதர்களையும் நான் பாராட்டுகிறேன். 7. இங்குள்ள இந்தப் புதிய சகோதரன், சகோதரர் சாலொமோன் கிங் (Solomon King). நான் அதைத் தவறாகக் கூறக்கூடும். நான் சாலொமோன் ராஜாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்க முடிகிறது, அதைத் திரும்பிப்பார்க்கும் போது. அது அந்த நாளில் இருந்த இராஜா; இவரும் கூட வேறொரு ராஜா தான். அது சரியே. ஏதோவொரு வகையில் ஒரு ராஜாவின் குமாரன் தான், அது சரிதான்; ஒரு ராஜாவின் குமாரன்; ஒரு ராஜாவின் குமாரன் அல்ல, அந்த ராஜாவின் குமாரன்! 8. நான் இதைக் காணும்போது, சில வருடங்களுக்கு முன்பு இங்கே மெக்ஸிகோ வில், மெக்ஸிகோ சிட்டியில் நடந்தது என் நினைவுக்கு வருகிறது. நாங்கள் அங்கு ஒரு இரவு இருந்தோம், அதற்கு முந்தைய இரவில் ஒரு குருடான மனிதன் மேடையில் வந்தான், அவன் பல ஆண்டுகளாக முற்றிலும் குருடாக இருந்தான். நான் அவருடைய கால்களைப் பார்த்தேன். நான் அங்கே ஒரு நல்ல சூட், ஒரு ஜோடி காலணிகளுடன் நின்று கொண்டிருந் தேன். நான் அவருடைய ...ஐ பார்த்தேன். அவர் குருடாகவும், காலணிகள் அணியாமலும், கிழிந்த கந்தலான கால்சட்டைகளை அணிந்தவ ராய், அந்த மழையில் வெளியே நின்று கொண்டிருந்தார். ஓ, ஒருவேளை முப்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள், அந்த மழையில், ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்தவாறு அங்கே நின்று கொண்டிருந்தனர், எந்த இருக் கைகளும் இல்லை; அவ்விரவில் அங்கு வரும் படியாக, அந்த அதிகாலைமுதலே அங்கே காத்துக் கொண்டிருந்தனர். அங்கேதான் இந்தக் குருடன் பார்வையடைந்திருந்தார். "9. அடுத்த நாள் இரவு, ஏறக்குறைய இங்கிருக்கும் இந்த பெஞ்சைப்போன்று இரண்டு மடங்கு அளவுக்கு, நாம் அதை என்னவென்று அழைத்தாலும், அந்த அளவுக்கு, ஜனங்கள் அணிந்து விட்டுவிட்ட பழைய சால்வைகளும் கோட்டுகளும் மேடையின்மேல் குவிந்திருந்தன. அந்தத் திரைச்சீலை தொங்குகிறதே, ஏறக்குறைய அவ்வளவு உயரத்திற்கு குவித்து வைக்கப் பட்டிருந்தன. ""வெறுமனே நாங்கள் அதைத் தொடுவதற்காக!” " அங்கே மெக்ஸிகோ சிட்டியில் பெரும்பா லானவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர், நிச்சயமாக. 10. நான் இராணுவ அழைப்பின் கீழ் வந்த முதல் புராட்டஸ்டன்ட்டாக உள்ளே நுழைந் தேன். அது இங்குள்ள நம்முடைய நல் நண்ப ராகிய தளபதி மதீனாவிடமிருந்து (General Medina) வந்த அழைப்பாகும், முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்கள். "11. அந்த இரவில் வெளியிலிருந்து ஒரு கூக்குரல் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. என் மகன் என்னிடம் வந்து, ""குறைந்தது நூற்று ஐம்பது அல்லது அதற்கும் மேற்பட்ட வாயில் காப்போர் அங்கே நிற்கிறார்கள், அவர்களால் ஒரு சிறிய ஸ்பானிஷ் பெண்ணை தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்று காலையில் மரித்துப் போன ஒரு குழந்தையை அவள் வைத் திருக்கிறாள். அவர்களால் அந்தப் பெண்ணைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. அவள் அவர் களின் முதுகு மற்றும் எல்லாவற்றின் மேலும் ஏறிவிடுகிறாள்” என்று கூறினார். " "நான், “சரி, மேலும் கூடுதல் ஆட்களை கொண்டு அதைத் தடுத்து நிறுத்துங்கள்"" என்றேன். " "அதற்கு அவன், அதைத் தடுத்துநிறுத்த என்னிடம் வேறு எதுவும் இல்லை"" என்று கூறினான். " "அவளுக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடு"" என்று நான் கூறினேன். " "அதற்கு அவன், ""என்னிடம் ஒரு ஜெப அட்டையும் இல்லை. எல்லாவற்றையும் கொடுத்து முடித்துவிட்டேன்” என்றான். " "12. நான், ""சகோதரர் மூர் அவர்களே, நீங்கள் போய் அவளுக்காக ஜெபியுங்கள். ஏனென்றால் அவளுக்கு என்னைத் தெரியாது. நீங்கள் போய் அவளுக்காக ஜெபியுங்கள். நான் இன்னும் சற்றுநேரத்தில் இந்தப் பரிய துணிக் குவியல் களுக்காக ஜெபம் பண்ண முயற்சிக்கப் போகிறேன்"" என்று கூறினேன். " "13. நான் அங்கே நின்றுகொண்டிருந்த போது, கூட்டத்தினரை (audience) இந்த விதமாக நோக்கிப் பார்த்தேன், அப்போது எனக்கு முன்பாக ஒரு சிறிய மெக்சிகன் குழந்தை இருந்தது, அதற்கு பற்கள் இல்லை, அது எனக்கு முன்பாக அப்படியே புன்னகைத்து சிரித்துக் கொண்டிருந்தது. நான், ""சகோதரர் மூர், ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று நான் கூறினேன். " 14. அவர்கள் அந்தச் சிறுபெண்ணை கொண்டு வந்தார்கள். சிலுவையில் அறையப் பட்ட இயேசு கிறிஸ்துவின் சிறு உருவத்தை (crucifix) வைத்திருந்த அந்தச் சிறுபெண் உள்ளே வந்து கீழே முகங்குப்புற விழுந்தாள். மொழி பெயர்ப்பாளராயிருந்த ஒரு சகோதரன் மூலமாக, அவளை எழுந்து நிற்கும்படி கூறினேன். "15. மேலும் நான், ""சகோதரர் மூர், இது தான் அந்த குழந்தையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சற்றுமுன்பு ஒரு சிறு குழந்தை எனக்கு முன்பாக நின்று சிரித்துக் கொண்டிருப்பதை ஒரு தரிசனத்தில் கண்டேன்"" என்று கூறினேன். " 16. அவள் அதை ஒரு சிறிய, நீல மற்றும் வெள்ளை நிற கோடிட்ட துப்பட்டியின் கீழே வைத்திருந்தாள், அது அப்படியே முழுவதும் நனைந்து ஈரமாக இருந்தது. (அப்போது) மழை பெய்துகொண்டிருந்தது. அது ஏறக்குறைய இரவு பத்து மணி. அன்று காலை, சுமார் எட்டு அல்லது ஒன்பது மணியளவில், அந்தக் குழந்தை மருத்துவமனையில் (doctor's office) நிமோனியாவால் இறந்துவிட்டிருந்தது. அவ்வித மாய் அவள் மழையில் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய தலைமுடி முழுவதும் அவள் முகத்தில் கிடந்தது, அவள் மிகவும் அழகான வாலிப பெண்ணாயிருந்தாள். அது அநேகமாக அவளுடைய முதல் குழந்தையாக இருந்திருக் கும், அவள் 20 முதல் 23 வயதுக்குள் இருப்ப தாக தோன்றியது. அந்தச் சிறு குழந்தையோ மரித்துப்போயிருந்தது. "17. அப்பொழுது நான் என் கரங்களை அதின்மேல் வைத்து, ""கர்த்தராகிய இயேசுவே, இது எனக்குப் புரியவில்லை, ஆனால் நான் கண்ட தரிசனத்தின்படி..."" என்று சொன்னேன், அதைவிட அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை, (உடனே) அது உதைத்து, சத்தமிட்டது, அந்தச் சிறு குழந்தைக்கு உயிர்வந்தது. " 18. சகோதரன் எஸ்பினோசா என்னோடு இருந்தார். எஸ்பினோசாவை, சகோதரன் எஸ்பி னோசா அவர்களை எத்தனை பேருக்குத் தெரி யும்? அந்தக் குழந்தை அன்று காலையிலேயே மரித்துவிட்டது உண்மை என்று கண்டறிந்து, அந்த அறிக்கைக்கு கையொப்பம் பெற, மருத்துவரின் அலுவலகத்திற்கு (doctor's office) அதைப் பின்தொடர்ந்து போனவர் அவர்தான், பாருங்கள், அது சரியே. 19. எனவே நாம் அவரிடத்தில் அதேவித மான விசுவாசத்தை வைத்திருக்கக் கூடுமானால், அவர் இன்றும் அதே தேவனாகவே இருக்கிறார். அது சரியே. "20. எங்கள் பரலோகப் பிதாவே, அச்சிறிய மெக்சிகோ நாட்டு பெண்ணின் அந்த விசுவா சத்தை இன்று எங்களுக்கு அனுப்பும். அந்தச் சிறிய, குருடன் முந்தைய இரவில் சுகமாக்கப் பட்டதை அவள் பார்த்திருந்தாள். அவளுடைய குழந்தையுடன் வெளியே நின்றுகொண்டிருந் தாள், வீசிக்கொண்டிருந்த அந்தக் குளிர்ந்த காற் றில், அதற்கு நிமோனியா ஏற்பட்டது. அடுத்த நாள் அதிகாலையிலே, அது மருத்துவமனையில் (doctor's office) மரித்துப்போய்விட்டது. ""தேவ னால் குருடான கண்களைக் குணப்படுத்த முடியுமானால், இருதயத்தின் இரகசியத்தை வெளிப்படுத்த முடியுமானால், அது இன்னும் தேவனுடைய வார்த்தை தானே, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை இருதயத்திலுள்ள சிந்த னைகளை பகுத்தறிகிறது என்ற முதலாவது எண்ணம் அவளுக்கு உதித்தது. தன்னுடைய இருதயத் திலுள்ள எண்ணங்களையும் அவரால் பகுத்தறிய முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர் லாசருவை கல்லறை யிலிருந்து உயிரோடு எழுப்ப முடிந்தது என்றும், அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராக இருக்கிறார் என்றும் அவள் அவரை விசுவாசித்தாள். அவள் வந்தபோது, கர்த்தாவே, அவளது குழந்தையை அவளுக்குத் திரும்பக் கொடுத்ததன் மூலம் நீர் அவளுக்கு பலனளித்தீர். எங்களுக்குத் தெரிந்தவரையில் அது இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். " 21. பிதாவே, இன்று எங்களை ஆசீர்வதியும். இங்கு வைக்கப்பட்டுள்ள இந்த கைக்குட்டைகள் மற்றும் கோட்டுகளோடு கூட இந்த ஜனங் களையும் ஆசீர்வதியும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது வந்து, தேவனுடைய வார்த்தையை எங்களுக்குப் பகிர்ந்து தருவாராக. இயேசுவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 22. சற்றுநேரத்தில் அல்லது ஐந்து மணிக்கு உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும், அப்படித்தான் என்று நம்புகிறேன். வழக்கமாக தொடங்குவதற்கான நேரத்தை அது எனக்கு கொடுக்காது, ஆனால் நான்-நான் இப்பொழுது அதைக்குறித்து என் மனதை மாற்றிக்கொண்டேன் என்று நினைக் கிறேன். நான் இந்த வாரம் தொண்டைவலியி னால் அதிகம் கஷ்டப்பட்டேன், ஒருவேளை அது நன்மைக்கேதுவாகவே நடந்திருக்கும். "23. நான்-நான் எனக்கு ஒரு செயற்கை முடிக்கற்றையை (hairpiece) வைத்திருக்கிறேன் என்று அன்றொரு நாள் ஜனங்களிடம் கூறினேன், ஆனால் நான் அதை அணிய வெட் கப்பட்டேன், ஏனென்றால் நான் பெண்களிடம் அவர்களுடைய தலைமுடியைக் குறித்து அதிக மாக கூச்சலிட்டிருந்தேன். என்னுடைய தலை மயிர் கார்போலிக் அமிலத்தால் போய்விட்டது. அன்றொருநாள் இரவில் அவர்கள் அந்த கதவைத் திறந்தபோது, கொஞ்சம் காற்று இங்கே இதன் வழியாக வந்தது, நான் இன்று திரும்பி வருவேன் என்று நினைக்கவேயில்லை. நான், ""ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் இங்கே இருப் பாரானால், அவர் விரும்பினால், (எனக்குப்) பதிலாக (பேசலாமே)"" என்றேன். அவரை இன்னும் காணவில்லை, எனவே நான் வேத வாக்கியத்தை வாசிக்கும்போது, எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். " 24. பரிசுத்த மத்தேயு, 27-ம் அதிகாரம், 11-வது வசனம் தொடங்கி, நான் வாசிக்க விரும்பு கிறேன். இப்போது வார்த்தையை வாசிக்கும் போது கூர்ந்து கவனியுங்கள். காரணம், என் வார்த்தை ஒரு மனிதனின் வார்த்தை, அது தவறிப் போகும். அவருடைய வார்த்தையோ தவறிப்போக முடியாது, எனவே இப்போது நாம் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். 25. நீங்கள் (வேதாகமத்தைத்) திருப்பிக் கொண்டிருக்கையில், நம்முடைய சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களும் அடுத்த வெள்ளிக் கிழமை இரவில் எருசலேமில் இருக்கப் போகிறார் என்பதை அறிவிக்க விரும்புகிறேன், எனவே நீங்கள் அனைவரும் வர விரும்பு கிறோம். நீங்கள், “எங்கே?” என்று கேட்கலாம். புளோரிடா வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசம் என்று யாரோ சொன்னார்கள், நான் டூசானை எருசலேம் என்று அழைக்கலாம் என்று ஊகிக்கிறேன். பீனிக்ஸ் பள்ளத்தாக்கில் உள்ளது, பாருங்கள், எரிகோ எருசலேமுக்குக்கு கீழே பள்ளத்தாக்கில் இருக்கிறது. நான் அவ்விதமாக ஒருபோதும் இங்கிருந்து வெளியேற மாட்டேன், அப்படித்தானே? சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ் அவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை இரவில் பேசுகிறார், நீங்கள் அனைவரும் அவர் பேசுவதைக் கேட்டு மகிழ்வீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். உங்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடை வோம். 26. 27-ம் அதிகாரம், 11-வது வசனம். இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய கிறிஸ்துவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடி தான் என்றார். (பிரதான) பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், ... மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகி றார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்ல வில்லை; அதனால் தேசாதிபதி ... ஆச்சரியப் பட்டான். காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுத லையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதி பதிக்கு வழக்கமாயிருந்தது. அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: இந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். பரபாசை விட்டுவிடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார் கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ... என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிக மதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத் தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன் பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக்கொடுத்தான். "27. இன்று என் கருப்பொருள், அடுத்த முப்பது நிமிடங்களுக்கு, நான் அதை கருப் பொருள் என்று அழைக்க வேண்டுமானால், இதுதான்: கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதன்பிறகு நான் இதையும் கூற விரும்புகிறேன், ""இயேசு நம் கரங்களில். " 28. இப்போது, நம்முடைய காட்சி பிலாத் துவின் நியாயத்தீர்ப்பு மன்றத்தில் தொடங்கு கிறது, அது ஏறக்குறைய சூரியன் உதித்து வரும் காலை நேரமாக இருந்தது என்று நம்புகிறேன். மேலும் இது முழு சரித்திரத்திலேயே மிக வருத்தமான நேரங்களில் ஒன்றாகவும், மிக மிக முக்கியமான நேரங்களில் ஒன்றாகவும் இருந்தது. அது சபை தன் வரலாற்றிலேயே செய்த மிக மோசமான தவறாகும். அவர்கள் சரியாக அதைத்தான் செய்திருந்தனர், இப்போது அது எதிர்பாராவிதமாக தேசத்து அதிபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. சபை மற்றும் அரசாங்கம் இரண்டுமே, ஏனென்றால் அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாகவும், அவருடைய ஊழியக்காரர் களாக இருக்கும்படி அழைக்கப்பட்ட ஜனங்க ளாகவும் இருந்தனர், மேலும் அந்த தேசமானது தேவனுடைய பிரமாணங்களால் கட்டுப்படுத் தப்பட வேண்டியிருந்தது. 29. சபை அவர்களுடைய மேசியாவைப் புறக்கணித்திருந்தது. அவர் அவர்களுக்கு மிக நன்றாக அடையாளம் காணப்பட்டபோதிலும், வருவார் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுக ளாகவே தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த அபிஷேகம் பண்ணப்பட்டதும், சரி என நிரூபித்துக்காட்டப்பட்டதுமான வார்த் தையை விசுவாசிப்பதைக் காட்டிலும், அந்நாளி லுள்ள பரிசேயர், வேதபாரகர் என்பவர்க ளுடைய யூத பாரம்பரியத்தோடு (tradition of the elders) தரித்திருப்பதையே அவர்கள் தெரிந்து கொண்டனர். 30. அதோடு அவர்கள் குருடாயிருப்பார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் எப்படி குருடாக் கப்படுவார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அவர்கள் குருடராகத்தான் இருந்தனர். 31. அவர்கள் தங்கள் பெரிய தவறைச் செய்து, இந்த நாளிலே அதைக்குறித்த தங்கள் கடைசி காட்சியைக் காண்பித்தும் விட்டார்கள். இப்பொழுது அது அரசாங்கத்தின் கரங்களில் உள்ளது, இப்போது அரசாங்கம் தான் தனது தெரிந்துகொள்ளுதலைச் செய்தாக வேண்டும். அவர் தான் அவர்களுடைய மேசியா என்று முற்றிலுமாக தேவன் நிரூபித்திருந்தபோதிலும், சபைகள் ஏற்கனவே அவரைப் புறக்கணித்து விட்டிருந்தன. "32. இப்பொழுது நாம் இதற்குள் செல்வதற்கு முன், உரை மற்றும் இன்னபிறவற்றிற்கு செல்வதற்கு முன்பு சற்றுநேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், இதைப்பற்றி நான் இங்கு எழுதிவைத்துள்ள குறிப்புகள் என்னிடம் உள்ளன. அந்த ஜனங்கள் எவ்வாறு அதைக் காணத் தவறியிருக்க முடியும்? வேதவாக்கியம் தெளிவாகக் கூறும் ஒரு காரியம் என்ன வென்றால், ""அவர்கள் குருடர்களாக இருந்தனர்” என்பதுதான். ஆனால் இன்று கடினமாக இருப் பதைப் போலவே, அவர்கள் குருடர்களாய் இருக்கிறார்கள் என்று அவர்களைப் புரிந்து கொள்ளும்படி செய்வது (அன்றும்) கடின மாகவே இருந்தது. " "33. இந்தச் சந்ததியார் ""நிர்வாணிகளாயும், பரிதபிக்கப்படத்தக்கவர்களாயும், தரித்திரர்களா யும், குருடராயும் இருந்தும், அதை அறியா தவர்களாயிருக்கிறார்கள்"" என்று வேதம் நமக்குக் கூறுகிறது. இப்பொழுது, அது வேதவாக்கிய மாயிருக்கிறது. இப்போது அமெரிக்கர்களாகிய நாம் குருடர்களாயிருக்கிறோம் என்று சொல்லிப் பாருங்கள், (அப்பொழுது) நீங்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறி யாதிருக்கிறீர்கள் என்று நாம் விரைவாகச் சொல்லிவிடுவோம். " 34. நாம் குருடராயிருக்கிறோமா, இல்லையா என்று அறியும்படி இன்று பிற்பகல் உங்களைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன். இன்று பிற்பகல் வேளையில் இயேசுவை வழக்கு விசாரணையில் வைத்திருக்கிறோம், அவருடைய இரத்தப்பழி நம் கரங்களில் உள்ளது, இப்போது அதைப் பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காண விரும்புகிறோம். அப்போது அவர்கள் எண்ணாமல் துணிந்து செய்த அதே தவறையே நாமும் செய்வோமா? "35. என்ன சம்பவித்தது என்பதைக் கவனி யுங்கள். அவர் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, மேசியாவாக அவர் நிறை வேற்றுவார் என்று தேவன் கூறியிருந்த பணியை அவர் நிறைவேற்றியிருந்தார். அதைப் பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. ஏனென்றால், அவர் எப்படி பிறப்பார் என்று தேவன் கூறினாரோ அதேவிதத்தில் அவர் பிறந்தார். அவர் எவ்வாறு புறக்கணிக்கப்படுவார் என்று தேவன் சொல்லி யிருந்தாரோ அதேவிதமாக அவர் புறக்கணிக்கப் பட்டார். அவர் தம்மையே மேசியா என்று நிரூபித்திருந்தார், ஏனென்றால் மேசியா தேவனாக இருந்தார். மேசியா என்றால் ""அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று அர்த்த மாகும். அவர் தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக தமக்குள் வாசம்பண்ணப் பட்டவராய் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார். அவர் வெறுமனே ஒரு தீர்க்கதரிசி மட்டுமல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் கூட, அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலா னவராய் இருந்தார். அவர் தேவகுமாரன் என்னப்பட்ட ஒரு மனிதருக்குள் சரீரப்பிரகார மாக வாசம்செய்த தேவத்துவமாக இருந்தார். பிதாவாகிய தேவன் ஒரு கன்னிகையை நிழ லிட்டு, அவளுக்குள், அவளது கர்ப்பத்தில், இரத்தத்தை, தேவ குமாரனைப் பிறப்பித்த ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார், அந்த தேவ குமாரனுக்குள் தான் தேவன் வாசம்பண்ணி னார். " "36. தாம் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்று அவர் சொன்னபடியே அவர்களுக்கு அடை யாளம் காணப்பட்டார், ஆனால் அவர் நேரே வெளிப்படையாக வந்து, ""நான் தேவனுடைய குமாரன்” என்று அவர்களிடம் ஒரு போதும் சொல்லவில்லை. இல்லை, இல்லை. அவர்கள் தான் அதை விசுவாசித்தாக வேண்டும். அவர், ""என்னுடைய கிரியைகள் நான் யாரென்று சாட்சி கொடுக்கின்றன"" என்றார். ""வேதவாக்கியங்களில் தேடிப்பாருங்கள்"" என்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார், அப்பொழுது தாங்கள் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்டு, அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். " 37. இன்னொரு யாத்திரை சமீபமாயுள்ளது என்பதை நாம் காண்கையில், நாமும் இதைச் செய்வது அவசியம் என்று நான் நினைக் கிறேன். காரியங்கள் எழும்புவதை நாம் காணும்போது, நாமும் வேதவாக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 38. அதன்பிறகு சபையானது அவரோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்ற தங்கள் தீர்மானத்தை செய்திருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். வார்த்தையானது அவரைச் சரியாக அடையாளம் காண்பித்து, அவர் மேசியாவாக இருந்தார் என்பதை அவரது கிரியைகள் நிரூபித்துக் காட்டியபோதும், ஏன் அவர்கள் அவரோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை? அது அந்த சபை செய்த அவ்வளவு பயங்கரமான, மிக முக்கிய தவறாகும்! 39. நாமும் அதே தவறைச் செய்ய கூடுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர் என்னவாக இருந்தார் என்பதைப் பார்த்து, அதை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குக் கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொ ழுது, தேவன் அனுப்புவதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு எப்போதும் சந்தர்ப்பம் கிடைக் காது. பாருங்கள், இறுதியாக அவருடைய பொறுமை போய்விடுகிறது. அப்போது நீங்கள் கிருபைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையே யுள்ள அந்தக் கோட்டைக் கடந்துவிடுகிறீர்கள். தேவனுடைய பொறுமை இறுதியாக தீர்ந்து போகும்போது அங்கே நியாயத்தீர்ப்பைத் தவிர வேறெதுவும் மீதமிருக்காது. 40. ஆனால் அவர்களுக்கு இந்த தருணம் கொடுக்கப்பட்டிருந்தது, அவர் தம்மை அடை யாளங்காண்பிப்பதை அவர்கள் கண்டிருந்தார் கள், அவர் கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ யிடம், அவளுக்கு ஐந்து புருஷர்கள் உண்டு என்று கூறியதையும் கண்டிருந்தார்கள். பிலிப்பு சென்று, நாத்தான்வேலை அவருடைய சமூ கத்தில் அழைத்துக் கொண்டு வந்தபிறகு, நாத்தான்வேல் அவரிடம் வருவதையும், அவர் பேசி, அவன் யாரென்றும், எங்கிருந்து வருகி றான் என்றும் சரியாக கூறினதையும் கண்டிருந் தார்கள். சீமோன் பேதுருவிடம் அவனது தகப்பன் யார் என்றும், அவனுடைய பெயர் என்னவென்றும் கூறினதை கண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் இருக்கவில்லை. "41. அந்தச் சிறு வேசியும்கூட தேவனுடைய வார்த்தையை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் ஏதோவொன்றால் முழுவதும் குழப்ப முற்றவளாய் இருக்கவில்லை. இந்த சொல்லை நீங்கள் மன்னிப்பீர்களானால், அவள், அவள், நல்லது, அவளுடைய சிந்தையானது, இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ""குழப்பமான நிலை” என்று நாம் அழைக்கக் கூடிய அவை எல்லாமாக இருக்கவில்லை. அதைப் பொறுத்த வரையில், அது ஒரு தூய மனதாகவே (virgin mind) இருந்தது. ""மேசியா வருகிறார் என்று எங்களுக்குத் தெரியும், இதைத்தான் அவர் செய்வார்” என்று அவள் கூறினாள். " "அதற்கு அவர், ""நானே அவர்"" என்றார். " "42. உடனே அவள் சீக்கிரமாய் ஓடி, அந்தப் பட்டணத்து மனிதனை நோக்கி: ""வந்து, அவரைப் பாரும், அவரே மேசியா"" என்றாள். " "43. ஏன், அன்றைய கல்விமான்களும் ஜனங்களும் அதைக் காண முடியவில்லை. நீங்கள் வேதவாக்கியங்களை அறியாமல் இருந் தால், அதைக் காண்பது கடினமாகவே இருக் கும். ஆனால், ""அவர்கள் குருடாக்கப்பட்டனர்” என்று வேதவாக்கியம் கூறுகிறது. அவர்கள் உண்மையில் குருடாக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அன்பு நிறைந்த அந்த இயேசுவைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக... 'இவனைச் சிலுவையில் அறையும்! என்ற கூக்குரல் வருவதை நாம் கேட்கிறோம். " "44. பிலாத்து, ""கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?"" என்று கேட்டான். " அதற்கு அவர்கள், “இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சொன்னார்கள். "“உங்களுக்காக யாரை நான் விடுதலை செய்வது? பரபாஸையா அல்லது இயேசுவையா?""" 45. உயிரைக் கொடுப்பவருக்குப் பதிலாக ஒரு கொலைபாதகனைத் தெரிந்துகொண்டதன் மூலம் அவர்கள் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் ஆபத்தான தவறைச் செய்துவிட்டார்கள். ஜீவனைக் கொடுப்பவர் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இருக்க, அவர்களோ ஜீவனை எடுப்பவன் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு கொலைபாதகனைத் தெரிந்து கொண்டார்கள். என்ன ஒரு முரண்பாடு! என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. 46. இதை நான் என் சகோதர சகோதரி களுக்கும், நான் பிரசங்கம் பண்ணுகிற, இன் றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லா தேவ மரியாதையோடும், சகல ஜனங்களுக்கும் என் இருதயத்தில் கொண்டிருக்கும் அன் போடும் கூட சொல்கிறேன்: அப்போது அவர் கள் கண்டதுபோன்ற அதே காரியத்தையே நாமும் காண ஏறக்குறைய நாம் ஆயத்தமாக இல்லையோ என்று எனக்கு வியப்பாக உள்ளது! அரசாங்கம் இதில் சம்பந்தப்பட்டிருந்தது, விசாரணை நடந்து கொண்டிருந்தது (issue was on). அந்தக் கேள்வி தீர்த்துவைக்கப்பட்டாக வேண்டும். அது ஒரு பலப்பரீட்சையாக இருந்தது. "47. இன்றைக்கும் அது அவ்வாறே உள்ளது, இந்த மணிநேரத்திலும் அது அப்படியே இருக் கிறது! பலப்பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது! ஏதோவொன்று செய்யப்பட்டாக வேண்டும், நீங்கள் ஆம்"" அல்லது இல்லை என்று சொல்லியாக வேண்டும். ஆனால், நீங்கள் அதைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வித மாக அது இருக்காது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்களே உங்கள் சொந்த தெரிந்துகொள்ளுதலின்படி அதைச் செய் தாக வேண்டும். இப்பொழுதே! அந்த நேரம் வரும்போது அதைச் செய்துவிடலாம் என்பது அல்ல; அந்தநேரம் வரும்போது, அது முடிந்து விடும். இப்போதே அதைச் செய்தாக வேண் டும்! (Now! Not when that time takes place; when it does, it's over. Now!) தெரிந்துகொள்ள உங்களுக்கு நேரம் இருக்கும் கடைசி நாளாக இது இருக்கலாம். அப்பொழுது (கடைசி தருணம் முடிந்தபிறகு) உங்களால் அதைச் செய்ய முடியாது, அப்பொழுது நீங்கள் ஏற்கனவே அதைத் தரித்து விட்டிருப்பீர்கள்; அந்நேரத்தில் அது மிகவும் தூரமாக இருக்கும். நீங்கள் இப்பொழுதே அதைச் செய்தாக வேண்டும். கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம், ஏனென்றால் (அப்பொழுது) படகு விலகி அப்பால் சென்று, உங்களை விட்டுப் போய்விடும். (அப்போது) கதவுகள் மூடப்பட்டு விடும். " 48. மழை பெய்யத் தொடங்கியபோது, அநேகர் பேழைக்குள் நுழைய முடிந்திருந்தால், அவர்கள் பேழைக்குள் வந்திருப்பார்கள். ஆனால் அதற் கான தீர்வு உண்டாக்கப்பட்டிருந்தது, சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டிருந்தது, அடையாளங்கள் காண்பிக்கப் பட்டிருந்தன; நேரம் முடிந்து விட்டது, அப்போது மழை பெய்து கொண்டிருந்தது, நியாயத்தீர்ப்பு நடந்து கொண்டிருந்தது. "49. இப்பொழுது, முழு தேசமும் அவரைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால், இது ஒரு கிறிஸ்தவ தேசம் என்று அழைக்கப் படுவது போன்று, இன்று ஒரு கிறிஸ்தவ தேசம்"" என்று நாம் சொல்வது போல், அதுவும் அழைக்கப்பட்டது. ஆகையால், அது யெகோ வாவின் தேசம் என்றும், (அவர்கள்) அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தும், முழு தேசமும் அவ ரைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது. சபை யானது ஏற்கனவே அவரைப் புறக்கணித்து விட்டிருந்தது. சபை அவரை வலுக்கட்டாயமாக வெளியே துரத்தியிருந்தது. அவர்கள் அவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்ப வில்லை, ஆனால் இப்பொழுது அரசாங்கம் அதில் சம்பந்தப்பட்டிருந்தது. " "50. அது மறுபடியும் அவ்வாறே நிகழ்கிறது, அது மீண்டும் மடிக்கே திரும்பி வந்து விட்டது, சம்பவிக்கும் என்று இயேசு கூறியது அப்படியே துளிக்கூட பிசகாமல் சரியாக இங்கேயுள்ள வேதவாக்கியத்தோடு அடையாளம் காணப்பட்டு விட்டது. இருளான இந்த வேளையில் நாம் ஏன் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்? நாம் முற்றி லுமாக எச்சரிக்கப் பட்டிருக்கும்போது, ஏன் இது நம்மேல் வர அனுமதிக்கிறோம்? லோத்தின் நாட்களில் நடந்தது போலவே, நாமும் அதே காரியத்தைக் காண்கிறோமே. யெகோவா காட்சியை அமைத்துவிட்டு, ""லோத்தின் நாட்களில் நடந்ததுபோலவே!"" என்று நம்மிடம் கூறியிருக்கிறார். செய்தியாளர்கள் அதோ அங்கிருக்கிற பாபிலோனுக்குள் சென்று, லோத்தை வெளியே கொண்டுவர முயற்சிப்பதை நீங்கள் காண்கிறீர்கள்; ஏற்கனவே வெளியி லிருக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகா மிடம் செய்தி வருவதையும் நீங்கள் காண்கிறீர்கள். எல்லாமே பெயரின்படியும், இடத்தின்படியும், நேரத்தின் படியும் துளிகூட பிசகாமல் முழுமையாக அடையாளம் காணப்பட்டு விட்டது. " 51. ஆனால் இப்போது அது அரசாங்கத்தின் கரங்களில் தான் உள்ளது. அரசாங்கம் தான் இப்போது அதற்கு தண்டனைவிதித்தாக வேண் டும், அவர்கள் அதைச் செய்யத்தான் போகி றார்கள். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது ஒரு கிறிஸ்தவ தேசம், இது ஒரு கிறிஸ்தவ தேசமாக இருக்குமானால், இதன் கிறிஸ்தவ நிலைப்பாட்டை இது எடுத்தாக வேண்டும். பலப்பரீட்சை நடந்துகொண் டிருக்கிறது. 52. முழு தேசமும் நியாயத்தீர்ப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டியிருந்தது. ஏனென் றால், மாபெரும் ரோம தளபதியான தீத்து கி.பி.70-ல் எருசலேமை முற்றுகையிட்ட போது, அது நடந்தது, அவன் கி.பி.70-ல், ரோமாபுரி யிலிருந்து வந்த தனது சேனையைக் கொண்டு, எருசலேமை முற்றுகையிட்டபோது, அவரைப் புறக்கணித்ததற்கான கிரயத்தை அவர்கள் அங்கு செலுத்தினார்கள். 53. அங்கு நடந்த அந்த வழக்கு விசாரணையை நாம் இன்றைக்குப் பார்க்கும்போது, நாம் இங்கு சென்று, பெரிய வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளை வெவ்வேறு விதமாக நடித்துக்காட்டி, அதைக் குறித்துப் பேசி, காரியங்களைச் (செய்கிறோம்). அந்தப் பெரிய வெள்ளிக்கிழமை நடந்த, அதே காரியத்தைக் குறித்துதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், அது தெளிவாக இருந்தாலும், இன்றைக்கு அதைக் காணத் தவறிவிடுகிறோம்! அதைப் போன்ற வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது அங்கே சரி என நிரூபித்துக் காட்டப்பட்டது போன்று அதேவிதமாகவே இந்த நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையும் நிரூபித்துக்காட்டப்பட்ட பிறகும், அவர்கள் செய்த அதே காரியத்தையே நம் முடைய மூப்பர்களும் (elders) செய்து, அதே போன்றதொரு வழக்குவிசாரணையில் அதை ஈடுபடுத்துகிறார்கள். "54. இயேசு, ""ஒரு சாதாரண தச்சனின் மகன்” என்று நினைத்தார்கள். அவரோ வெளிப் படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தார். தேவனுடைய கிரியைகள் தாமே அவர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டு, அவரே மேசியா என்று நிரூபிக்கப்பட்ட காரணத்தி னால், அவர் முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். " 55. கடைசிநாட்களில் பரிசுத்த ஆவியான வர் நம்மேல் வந்து, நம்முடைய சபையில் தம்மைத்தாமே அடையாளம் காண்பித்து, தாம் இங்கு இயேசு கிறிஸ்துவின்மேல் பரிபூரணத் தில் இருந்தபோது, அவர் செய்த அதே கிரியை களை நிரூபித்துக்காட்டியதால், அதேபோன்ற சூழல் மறுபடியும் வந்திருக்கிறது. அவர் மணவாட்டி மீதும் அதே காரியத்தைச் செய்து, அதே காரியத்தையே செய்துகொண்டிருந்தும், நாம் அதை தூர எறிந்துவிடவே விரும்பு கிறோம். 56. இவைகள் இப்பொழுது ஒலிநாடாக்களாக பதிவுசெய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், இங்கு பீனிக்ஸில் மட்டுமல்ல, இவை உலகம் முழுவதும் செல்கின்றன. நான் இந்நேரத்தில் உலகத்தில் பாதி பேரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உலகம் முழுவதும் செல்கிற ஒலிநாடா விற்பனை மற்றும் விநியோகப் பணியை நாம் பெற்றிருக் கிறோம். "57. கவனியுங்கள், அதே வார்த்தை அடை யாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகும், நாம் இன்றைக்கும் அதேபோன்ற வழக்கு விசாரணை யையே கொண்டிருக்கிறோம். எபிரெயர் 13:8, இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.' பரிசுத்த யோவான் 14:12, ""என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய் வான்."" மத்தேயு 28, ""உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” 'இதோ, இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண் பீர்கள், காலத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருப்பேன்."" ""இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்!"" " 58. அவர்கள் இன்று தெரிந்துகொண்டிருப்பது கொலைபாதகனை மட்டுமல்ல, வார்த்தையைக் கொல்லுகிறவனை தான், சரித்திரத்திலேயே முதல் கொலைபாதகனின் கீழிருப்பவனையே. 59. அப்போஸ்தலர்களாகிய அவர்கள் சுவி சேஷத்தைப் பிரசங்கித்து, ஐரினேயஸ் வழியாக வும், சென்ற ஆரம்ப காலத்தில் இருந்த மகத் தான பல சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்தா பகர்கள் வழியாகவும் வந்து, அது ஒருமுறை பலப்பரீட்சைக்காக நிசாயாவுக்கு வந்தபோது, ஜனங்களைத் தங்கள் அதிகார எல்லைக்குள் வரும்படி கட்டாயப்படுத்த, ஒரு உலகளாவிய சபையை உருவாக்க அவர்கள் தீர்மானித் தார்கள். அநேக பழங்கால தீர்க்கதரிசிகள் மிரு கத்தின் தோலினால் தங்களைப் போர்த்துக் கொண்டு, பச்சிலைகளையும் மற்றும் காரியங் களையும் தின்று, அந்த வார்த்தையைப் பற்றிக் கொள்ள முயன்று, தேவனுடைய வார்த் தையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தனர் என்பதை சரித்திரத்தை வாசித்திருக்கிற பலரும் அறிவார்கள். ஆனால் அந்த பதினைந்து நாட் கள் நடைபெற்ற குரூரமான அரசியலைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? முடிவில் அவர்கள் ஒரு உலகளாவிய சபையை ஏற்படுத்தி, கிறிஸ் தவத்தோடு கூட அஞ்ஞான பழக்கவழக்கங்கள் சிலவற்றையும் இணைத்து, அதை ஒரு உலகளாவிய சபையாக அமைக்க முடிவு செய்தனர். 60. மேலும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று பரிசுத்த ஆவியி னாலே முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இன்று, புரொட்டஸ்டன்ட்டுகளும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் தங்களை ஒன்று சேர்த்து, அதே காரியத்தையே செய்து, மனித னுடைய பாரம்பரியத்தில் ஒட்டுப்போடப்படுகி றார்கள் (grafting). சபையானது இன்று தரா சிலே நிற்கப்பட்டு, குறையக் காணப்படுகிறது. நீங்கள் மீண்டும் பிலாத்துவின் நியாயத்தீர்ப்பு மன்றத்தில் இருக்கிறீர்கள். ஆம், ஐயா. 61. அது என்ன செய்கிறது? அது மிருகத் திற்கென்று ஒரு சொரூபத்தை உண்டாக்குகிறது. அது ரோமாபுரியை (பின்பற்றி) சேவிக்கும் ஒன் றாகவே உள்ளது. உலக சபைகளின் ஆலோ சனை சங்கமானது வற்புறுத்தி, ஒவ்வொரு புரட்டஸ்டன்ட் ஸ்தாபனத்தையும் அதற்குள் (வரும்படி) கட்டாயப்படுத்தும்போது; இப்பொ ழுதே கிட்டத்தட்ட எல்லா புரட்டஸ்டன்ட் ஸ்தாபனங்களும், முழு சுவிசேஷ (சபையும்) மற்றும் எல்லாமே அங்கே உள்ளன. அந்த பலவந்தமானது (அழுத்தமானது force) வரும் போது, அவர்கள் (அதற்குள்) வர வேண்டும் அல்லது அதற்கு வெளியே இருக்க வேண்டும் என்ற வேளையானது வரப்போகிறது, (அப்பொழுது) நீங்கள் ஏற்கனவே மிரு கத்தின் முத்திரையோடு உங்களை அடையாளம் காணப்பட்டிருப்பீர்கள். இப்பொழுது, அது சரியாக (துளிகூட பிசகாமல்) உள்ளது. "62. அது என்ன? பழைய தாய்வேசியாகிய ரோமாபுரியோடு, புராட்டஸ்டன்ட் வேசிகள்! அவள் புராட்டஸ்டன்ட் ஸ்தாபனங்களாகிய ""வேசிகளுக்குத் தாய்"" என்று வெளிப்படுத்தின விசேஷம் 17 கூறுகிறது, அது சரியே; (அவள்) தேவனுடைய கோபாக்கினையாகிய பாத் திரத்தை தன் கையில் பிடித்து நீட்டிக் கொண்டி ருந்தாள், இதைத் தான் நாங்கள் விசுவாசிக் கிறோம்"", ஒவ்வொன்றையும், இதைத் தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்ற தன்னுடைய சாட்சியாகிய, தன்னுடைய மதுவுள்ள பாத்திரத்தில் குடிக்கும்படி (for her toast) அவ்வாறு செய்கிறாள். " "63. சபை விசுவாசிக்க வேண்டியது இதோ இருக்கிற தேவனுடைய வார்த்தையைத் தான், “எல்லா மனுஷருடைய வார்த்தையும் பொய் யாயிருக்கக்கடவது."" அவ்வாறுதான் இருக்க வேண்டும். " "64. ஆனால் கிறிஸ்து பிலாத்துவின் நியா யத்தீர்ப்பு மன்றத்தில் நின்றுகொண்டிருந்த அந்த மாபெரும் மிகமிக முக்கியமான மணி வேளைக்கு அவரை மீண்டும் கொண்டுவரு வோம்; (அவர்) தலைகுனிந்தபடி பரிதாப கரமாக (நிற்க), ஒரு சிறு கூட்டம் ஒரு பக்கமாக தள்ளப்படுகிறது. மற்ற ஸ்தாபனங்கள் அவர்களைப் புறக்கணித்து, அவர்களை நிராக ரித்து, அவர்களை உள்ளே நுழைய அனுமதிக் காமல், ""அதனோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். நீங்கள் வார்த்தையோடு சரிபார்த்துக்கொள்வது நல்லது. இப்பொழுது, இந்த உலக சபைகளின் ஆலோ சனை சங்கமானது... என்று கண்டு கொள்கி றோம். அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அது, வேதமானது... " """அதைப் பற்றி வேதம் கூறுகிறதா?"" என்று நீங்கள் கேட்கலாம். ஆம். " "65. ""தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப் பார்கள்."" குருடரும், நிர்வாணிகளும், சபைக்குப் போகிறவர்களும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு, இயேசு கிறிஸ்துவை அவருடைய வார்த்தையோடு அடையாளப் படுத்துகிற பரிசுத்த ஆவியின் வல்லமையை மறுதலிக்கிறார்கள். எவ்வாறு ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பதாகக் உரிமை கோரிக் கொண்டு, பரிசுத்த ஆவியாகிய அதே வார்த்தையை மறுதலிக்க முடியும்? எவ்வாறு ஒரு மனிதனால் அதைச் செய்ய முடியும்? அவன் இருக்க வேண்டிய விதமாக இல்லாமல், ஆவிக்குரிய வேசித்தனங்களைச் செய்து, தேவனுடைய வல்லமையை மறுதலிக்கிறான் என்பதை அவனுடைய சொந்த சாட்சியே சாட்சிபகர்கிறது. அவ்வாறுதான் சம்பவிக்கும் என்று பவுல், 2 தீமோத்தேயு, 3-ம் அதிகாரத்தில் கூறியுள்ளான், ""துணிகரமுள்ளவர் களாயும், இறுமாப்புள்ளவர்களாயும் இருப்பார்கள்"" என்று அவன் கூறியுள்ளான். " "66. ""நான் டாக்டர் பட்டம், Ph.D., LL.D. ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன்."" என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் தொடங்கியபோது இருந்ததைக் காட்டிலும், அது தேவனிடமிருந்து உங்களை அதிக தூரம் கொண்டுசென்றுவிட்டது. ஆம், ஐயா. அது உங்களை தேவனிடமிருந்து தூரமாக மட்டுமே கொண்டு செல்கிறது, உங் களை தேவனிடம் கொண்டு வராது. உங்களை தேவனை நோக்கி இழுக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் மட்டுமே உண்டு, அதுதான் பரிசுத்த ஆவியானவர், அவருடைய வார்த்தையின் மூல மாக அதைச் செய்கிறார். " 67. பரிசுத்த ஆவியானவர் ஒரு திசைகாட்டி யாக இருக்கிறார். வடக்கு நட்சத்திரம் என்பது வார்த்தையாகும். மேலும் திசைகாட்டி வடக்கு நட்சத்திரத்தை மட்டுமே சுட்டிக் காட்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களை வார்த்தையை நோக்கி மட்டுமே சுட்டிக்காட்டுவார், ஏதோ வொரு உலக சபைகளின் ஆலோசனை சங் கத்தை நோக்கியோ, ஏதோவொரு ஸ்தாப னத்தை நோக்கியோ அல்ல, மாறாக தேவ னுடைய வார்த்தையை நோக்கித்தான் சுட்டிக் காட்டுவார். மற்ற எல்லா நட்சத்திரங்களும் பூமியோடு கூட நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வடக்கு நட்சத்திரமோ சரியாக தரித் திருக்கிறது, ஏனென்றால் அது மையத்தில் உள்ளது என்பது உங்களுக்கு நினைவிருக் கட்டும். மற்ற ஒவ்வொரு மனிதனின் வார்த் தையும் தவறிப்போய்விடும், ஆனால் தேவ னுடைய வார்த்தையோ தவறிப்போக முடி யாது. இதுவே மையத்தில் அமைந்துள்ள வடக்கு நட்சத்திரமாக உள்ளது, இது உலகத் தோடு கூட நகர்ந்து செல்லாது. உலகமானது எங்கிருந்தாலும் சரி, அது நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அவரே வார்த்தையாக இருக்கிறார்! 68. சகோதர சகோதரிகளே, இதை நன்கு சிந்தித்துப்பார்க்கும்படி இயேசுவின் நாமத்தில் நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கி றேன். இந்த வருடங்களிலே நான் கூறியவை களை நீங்கள் விசுவாசித்திருக்கிறீர்களே. நான் சொன்னவைகள் சத்தியம் என்று தேவன் நிரூபித்திருப்பாரானால், அது நானல்ல, அதைச் செய்தது அவருடைய வார்த்தையே, அப்படி யானால் இதை ஆராய்ந்து பார்க்கும்படி, இயேசுவின் நாமத்தில் நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காரியங்களுக்குக் குருடாக இருந்துவிடாதீர்கள்; அது சரியாக உங்கள்மேல் உள்ளது. 69. மத்தேயு 24:24-ல், உலகத்தோற்ற முதல் (from the foundation of the of the earth) ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராத அனைவரும் இந்த முத்திரையைத் தரித்துக்கொள்வார்கள் என்று மத்தேயு 24:24-ல் வேதம் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். அதைக் காணும்படி நியமிக்கப் பட்ட தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதைக் காண்பார்கள். மற்றவர்கள் அதை பத்து லட்சம் மைல்கள் தூரத்தில் தவறவிட்டுவிடு வார்கள். 70. இப்பொழுது இந்தப் பெரிய அசைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம், சாத்தா னின் பெரிய அமைப்பானது ஆயத்தமாக்கப் பட்டுவிட்டது. அதற்குத் தேவையான ஒரே காரியம் என்னவென்றால் அது இயக்கவியலைப் (mechanics) பெற்று விட்டது, அதைச் செயல்படுத்த அதன் விசையியக்கவியலுக்காக (dynamics) மட்டுமே அது காத்துக் கொண்டி ருக்கிறது. அந்த அசைவானது ஒரு பெரிய ஆலோசனை சங்கமாகவும் மற்றும் காரியமா கவும் முழு சபையின்மேலும் (congregation) (வந்துவிட்டது). அந்தப் பெரிய அமைப்பானது (machine) அங்கே உருவாக்கப்பட்டு வருகிறது, ஆனால் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வேளைக்காகவே அவர்கள் காத்துக் கொண்டி ருக்கிறார்கள், அப்பொழுது அவர்கள் அதை ஏற்படுத்தி, அதை வலுக்கட்டாயப்படுத்தவும், அதை ஒரு சட்டமாக உருவாக்கவும் முடியும். இன்று நாம் ரேடியோவிலும் செய்தித்தாள் களிலும் கேட்கிற ஒலி பரப்புகளையும் மற்றும் காரியங்களையும் பாருங்கள். ஏன், அது சரியாக இப்பொழுதே உங்கள்மேல் உள்ளது. 71. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள் வதைத் தவிர வேறு எதையும் செய்ய நமக்கு நேரமில்லை. அவர் முழுமையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு விட்டார். "72. கவனியுங்கள், அங்கேயுள்ள சாத்தானின் பெரிய அமைப்பைக் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம், அது செயலைத் தொடங் கவும், பலவந்தமாக கீழ்ப்படிய வைக்கவும் (அடக்கவும், நசுக்கவும்) ஆயத்தமாயுள்ளது; ஆனால், வார்த்தையை விசுவாசிக்கிற தேவனுடைய சிறு கூட்டத்தின் இயக்கவியலும் (mechanics) கூட ஆயத்தமாயுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியால் அதை எரியச் செய்யும் (பற்றவைக்கும்) விசையியக்க வியலுக்காக (Dynamics) அது ஆயத்தமாயுள்ளது. ""பயப்படாதே, சிறு மந்தையே. உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா தயவுள்ளவராயிருக்கிறார் (good will). ""உலகத்தை விட்டு வெளியேவந்துள்ள ஒரு சிறு சபையின் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்குவார், அவர்கள் ...லிருந்து தங்களை வேறுபிரித்துக்கொண்டவர்கள் என்பதை நிரூ பித்துக்காட்ட நீண்ட தலைமயிரை அணிகிற நசரேயரான பெண்களாக அவர்கள் இருப்பார் கள். " 73. நசரேயன் என்பவன் என்ன? தேவனுடைய வார்த்தைக்காகத் தங்களை வேறு பிரித்துக் கொண்டவர்கள்; குட்டை உடைகளை அணிந்த வர்கள் அல்ல, அழகுசாதனங்கள் பூசப்பட்ட முகத்தையுடைய யேசபேல்கள் அல்ல, தங்களைத் தாங்களே கிறிஸ்தவர்கள் என்று அழைப்பவர்கள் அல்ல; இல்லை, ஐயா; தேவனுடைய வார்த்தைக்காக நிற்பதற்குப் பதிலாக, ஒரு ஸ்தாபனத்திற்காக நின்று, ஏதோவொரு சீசர் அல்லது ஏரோதுடைய கோட்டின் பின்புற தொங்கல்களைப் (coat tails) பிடித்துக்கொண்டிருக்கும் மிகவும் தைரி யம் குன்றிய மனிதன் அல்ல. ஆனால் உலகம் கூறுவதைப்பற்றி பொருட்படுத்தாத திடப்பற் றுள்ள ஜனங்களும், நம்பிக்கைக்குரிய தேவ னுடைய மந்தைகளும் தேவனுக்கு உண்டு. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அவர்கள் விசுவா சிக்கிறார்கள். 74. இது பிரபலமாக இல்லை. இது உங்களை பிரபலமற்றவராக ஆக்குகிறது, ஆனால் இது சத்தியமாயுள்ளது! இது கடைபிடிக்க வேண்டிய தேவனுடைய கட்டளையாகும், தேவன் அதைச் செய்வார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களைக் கடிந்து கொள்வதாகக் கருத வேண்டாம், மாறாக உங்களை எச்சரிப்ப தற்குத்தான். எந்நேரத்திலும் எரிந்து போவதைக் காட்டிலும் நெருப்பினால் சுடப்படுவதே நல்லது, எனவே எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். 75. புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள யாவரும் அதற்குத் தப்புவார்கள். இந்த உபத்திரவம் எல்லாவற்றிற்கும் தப்பும்படி, அதை மேலே உயர ஆகாயத்திற்குக் கொண்டுசெல்லும் விசை யியக்கவியலுக்காக (Dynamics) இந்தச் சிறு மந்தை ஆயத்தமாயுள்ளது என்பதை நாம் இப்பொழுது கண்டுகொள்கிறோம். "76. அன்றொரு நாள், நான் பேசிக் கொண்டி ருந்தபோது, யாரோ ஒருவர், ""சகோதரர் பிரன்ஹாம் அவர்களே, அப்படியானால் சபை உபத்திரவத்தினூடாகச் செல்லும் என்று நீங்கள் நம்பவில்லையா?” என்று கேட்டார். " "77. நான், சபையானது உபத்திரவத்தினூடாகச் செல்லும் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் மணவாட்டி அல்ல"" என்றேன். சபையானது உபத்திரவத்தினூடாய்ச் செல்லும், ஆம், ஐயா, ஆனால் மணவாட்டி அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். அவள் சீக்கிரத்தில், ஒரு இமைப் பொழுதில், எடுத்துக்கொள்ளப்பட்டு போய்விடுவாள். அவள் கலியாண விருந்திற் காக தன்னுடைய கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கும்படி மேலே எடுத்துக்கொள்ளப்படு வாள். அவள் எந்த உபத்திரவத்தினூடாகவும் செல்லவேண்டிய அவசியமில்லை (She has nothing to go through any tribulation about); அவளுடைய ஆண்டவர் அவளுக்கான கிரயத்தைச் செலுத்திவிட்டார். அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆம், ஐயா. " "78. சபை, தேசம் இரண்டுமே புறக்கணித்த பிறகு, ஒரே ஒரு கூச்சல் மட்டுமே வந்தது, அடுத்த நடவடிக்கையானது, ""இதை அகற்றும்!” என்பதாக இருந்தது. " "79. நம்மிடம் இருக்கும் அடுத்த கூச்சலும் அதுவே தான். சபையானது பரிசுத்த ஆவியை கடுமையாக புறக்கணித்துவிட்டது. அது புறக் கணித்துவிட்டது என்பதை நாம் அறிவோம். ஓ, அங்கத்தினர்கள் எல்லாவற்றைவிட்டும் வெளியே வந்துவிட்டார்கள், அது மகத்தான அழைப்பு தான், பிரஸ்பிடேரியன், மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன்; ஆனால் ஸ்தாபன சபை தாமே, நகரவே முடியவில்லை. இல்லை, ஐயா. அது ஏற்கனவே ஸ்தாபிக்கப் பட்டுவிட்டது. இப்பொழுது அதைக்குறித்த காரியம் என்ன? ""அதைச் சிலுவையில் அறையும்! அதைச் சிலுவையில் அறையும்!” என்ன? மறுபடியும் சிலுவையில் அறைதல், (எதை?) சத்தியம் என்று நிரூபிக்கப்பட்ட வார்த்தையை. தேவனு டைய வார்த்தை மறுபடியும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டது. ஏவாள் தேவனுடைய வார்த்தையில் மிக சிறிதளவை புறக்கணித்ததன் மூலமாக, நம்மைச் சுற்றிலும் நாம் காணும் இந்த முழு உலகத்தையும் சீரழித்துப் போட்டது போன்று, சபையும் அதே காரியத்தைச் செய்துவிட்டது. " "80. நீங்கள் என்னிடம், சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் அதைக் குறித்து தவறான வியாக்கியானத்தைப் பெற்றுள்ளீர்கள்"" என்று கூறலாம். சரி, அது உங்கள் கருத்தைப் பொறுத்தது. " 81. தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. தேவனே தம்முடைய சொந்த வியாக்கியானியாக இருக்கிறார். இன்று அதைக் குறித்த தொல்லையே அதுதான், மனிதனால் உண்டாக்கப்பட்ட மிக அநேக வியாக்கியானி களை நாம் பெற்றிருக்கிறோம். தேவன் தாமே வியாக்கியானத்தைச் செய்ய முடியும். அவ ருடைய வார்த்தையை அவரே சொந்தமாக நிரூபணம் செய்வதே அந்த வியாக்கியானமாக உள்ளது. "82. பரிசேயர்களும், ""நாங்கள் வியாக்கி யானத்தைப் பெற்றிருக்கிறோம்!” என்று கூச்ச லிட்டிருக்கலாம். சதுசேயனோ, நாங்கள் அதைப் பெற்றிருக்கிறோம்!” என்று கூறலாம். ஆனால் இயேசுவே அந்த வியாக்கியானமாக இருந்தார். ஆமென். " 83. வாக்குத்தத்தம்பண்ணப்பட்டுள்ள தேவ னுடைய வெளிப்படுத்தப்பட்ட வல்லமையின் வெளிப்பாடே (manifestation) அந்த நிரூபண மாகும். வேதவாக்கியங்களை வாசித்து, இன்று சபையானது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பாருங்கள். ஆம், ஐயா. தேவனுக்கு எந்த வியாக்கியானியும் தேவையில்லை. "84. அதைத்தான் அவர்கள் இயேசுவுக்குச் செய்தார்கள். அவர் வியாக்கியானத்தைக் கொண்டிருக்கவில்லை என்று நினைத்தார்கள் என்பதை சென்ற காலத்தில் அவர்கள் கண்டு கொண்டனர். அவரே வியாக்கியானமாக இருந் தார். தேவன் அதை வியாக்கியானம் செய்ய வேண்டியிருக்கவில்லை. இயேசுவின் ஜீவியமே வியாக்கியானம் செய்துவிட்டது. ""வேதவாக்கி யங்களை ஆராய்ந்துபாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே; என்னைக்குறித்துச் சாட்சிகொடுக் கிறவைகளும் அவைகளே. நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்காதிருங்கள். இந்த நாளைக்குறித்துச் உரைக்கப்பட்ட அந்தக் கிரியைகள் தாமே என்னிடத்தில் வெளிப்படாமல் இருந்தால், அதை நம்பாதிருங்கள்"" என்று அவர் கூறினார். " "85. அவர்கள் அதைச் செய்தார்களா? ""ஒரு கன்னிகை கர்ப்பந்தரிப்பாள்"" என்று தேவன் கூறினார், அவளும் கர்ப்பந்தரித்தாள்! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக; ஆனால் அவர்களோ விசுவாசிக்கவில்லை. ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்"", அவள் கர்ப்பவதியானாள். ""சப்பாணிகள் நடப்பார்கள், குருடர்கள் காண்பார்கள்"" என்றும், என்ன நடக்கும் என்றும் அது கூறியது. அவர்கள் அதைச் செய்வார்கள் என்பதை அது நிரூபித்துக் காட்டியது, இயேசுவே அந்த வெளிப்பாடாக இருந்தார் (Jesus was the manifestation). " "86. மோசே, ""உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்"" என்று கூறினான். வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறது. மேலும், தீர்க்கதரிசி, வார்த்தையானது இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறியும் ஒன்றாக இருக்கிறது. அவர் அவ் வாறு பகுத்தறிவதை அவர்கள் கண்டபோது, இவன் பெயல்செபூல், குறிசொல்பவன்"" என் றார்கள். அவர்கள் அதைக்காட்டிலும் மேலான ஒரு பெயரை அவருக்குக் கூறவில்லை (pin). இன்றும் அதே காரியம் தான், ஒரு ""பரிசுத்த- உருளை"" என்றோ அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாக அழைக்கிறார்கள். அது சரி. ...என்றாலும். " 87. அவருக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவரே வியாக்கியானமாக இருந்தார். தேவன் தம்மூலமாகவே அதை நிரூபித்தார். வார்த்தையானது வியாக்கியானம் செய்யப்படவில்லை என்பதை மறுக்கும் பாவ முள்ள அந்த மனிதன் இன்று யார், அல்லது அதை மறுக்கும் பாவமுள்ள அந்த மனிதன் அப்போது யாராக இருந்தது? "88. இயேசு அவர்களிடம் வினவி, ""வேத வாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள். நான் யார் என்று அவைகள் சாட்சிகொடுக்கின்றன. அவை தான் வியாக்கியானமாக உள்ளன. நான் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை என் வாழ்க்கை வியாக்கியானம் செய்யாவிட்டால், என்னை விசுவாசிக்காதீர்கள்"" என்று கூறினார். " 89. வேதாகமத்தை நோக்கி, இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை வியாக்கியானம் செய்து, இந்நாளில் அவர் செய்வதாக வாக்கு பண்ணியுள்ள வரங்கள் மற்றும் காரியங்களைக் குறித்த வாக்குத்தத்தங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக தம்மைத்தாமே தெரியப்படுத்த வில்லையா என்று காணக்கூடிய பாவமுள்ள மனிதன் இன்று யார் இருக்க முடியும்? சரியாக இங்கே காலத்தின் முடிவில், மல்கியா 4 நிறை வேறிக்கொண்டிருப்பதையும், மற்ற வேதவாக் கியங்கள் யாவுமே நிறைவேறிக் கொண்டிருப் பதையும் பாருங்கள்! இதை வியாக்கியானம் செய்ய உங்களுக்கு எந்த மனிதனும் தேவை யில்லை. இல்லை, ஐயா. அது தன்னைத்தானே வியாக்கியானம் செய்துகொள்கிறது. இதுவே இந்த மணிநேரத்திற்கான செய்தி என்பதை இது நிரூபித்துக்காட்டுகிறது! முழு உலகமே, மனந்தி ரும்பி, தேவனிடம் திரும்புங்கள்! சபைகளே, மனந்திரும்பி தேவனிடம் திரும்புங்கள்! உங்கள் கைகளிலிருந்து அவரைக் கழுவ முயற்சிக் காதீர்கள், ஏனென்றால் உங்களால் அதைச் செய்ய முடியாது. அப்போது இருந்ததைப் போலவே, இப்போதும் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. "90. அவர், ""வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகள் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. என் கிரியைகளே என்னுடைய வியாக்கியானியாக உள்ளன"" என்று கூறினார். " "91. அவர் அங்கு மேலே எரிகிற முட்செடி அருகில் மோசேயைச் சந்தித்தபோது, அவ னிடம் சொன்னது என்னவென்றால், ""இருக்கி றேன் (என்பவராகிய) நான் என்னுடைய வாக் குத்தத்தத்தை நினைவுகூருகிறேன். நான் வல்லமையுள்ள கரத்தால் அந்த ஜனங்களை வெளியே அழைத்து வருவேன் என்பதை நினைவுகூருகிறேன். நான் அந்த வாக்குத் தத்தத்தைப் பண்ணியிருக்கிறேன், நான் உன் னோடு வருவேன். நான் உன்னை அனுப்பு கிறேன். நீ எனக்காக பேசும் வாயாக (My mouthpiece) இருக்கிறாய், நான் உன்னை அனுப்பினேனா இல்லையா என்று இந்த அடையாளங்களே வியாக்கியானம் செய்யும்”என்றார். ஆமென். " 92. இன்று மனிதர்களும் ஸ்திரீகளும் அதைத்தான் எதிர்நோக்க வேண்டும், வேறொரு யாத்திரைக்கான வாக்குத்தத்தத்தையும், தேவ னுடைய வார்த்தை வெளிப்படுத்திக் காட்டப் பட்டுக்கொண்டிருப்பதைக் குறித்த வியாக்கி யானத்தையும் எதிர்நோக்க வேண்டும். "93. இன்று அதைக்குறித்த தொல்லை என்னவென்றால், அவர்கள், ""நல்லது, என்னு டைய சபை இதை விசுவாசிப்பதில்லை"" என்று கூறுகிறார்கள். காரியம் தான் என்ன? நீங்கள் வேறொரு காலத்தின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த சபைகள் தங்கள் காலங்களில் மிக நன்றாகத் தான் இருந்தன, ஆனால் இந்த காலத்தைக் குறித்து என்ன? இது வேறொரு காலமாகும். " 94. நீங்கள் ஒருபோதும் வெஸ்லியிடம் லூத்தரை நம்பவைக்க மாட்டீர்கள், அங்கே பரிசுத்த மாக்கப்படுதல் (sanctification) இல்லாதிருந்தது. இல்லை, ஐயா. 95. நீங்கள் ஒருபோதும் பெந்தெகோஸ்தே யினரிடம் பாப்டிஸ்டை நம்ப வைக்கவோ, அல்லது அதைப்போன்று, அதனிடம் திரும்பிச் செல்லும்படி செய்யவோ மாட்டீர்கள். அவர்கள் அதைவிட மேலான ஒன்றைக் கண்டுகொண்டு விட்டனர். அவர்கள் தங்கள் நாளின் வெளிச் சத்தில் ஜீவித்தனர். "96. இன்றைக்கு பெந்தெகோஸ்தேயினரும் அவர்கள் செய்ததைப் போலவே ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு (தொடர்ந்து செல்லாமல்) இருந்துவிட்டார்கள், அது சரியாக அதே காரியம் தான். வார்த்தையோ தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது, அது அவர்களைவிட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது. அது முற்றிலும் சரியே, ஏனென்றால் நாம் மிகவும் விறைப்பாகவும் சம்பிரதாயமுள்ளவர்களாகவும் ஆகிவிட்டோம். நாம் நம்முடைய சபைகள் எவ்வித நிலையிலும் இருக்க அனுமதித்து, அப்படியே போய்க் கொண்டிருக்கிறோம். ""நமக்கு அங்கத்தினர்கள் கிடைப்பது வரையில், தேவையானது எல்லாம் அவ்வளவு தான், ஏனென்றால் இதுவரை எங்களுக்கு இருந்த அங்கத்தினர்களைக் காட்டிலும் அதிக அங்கத்தி னர்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.” நாம் அதைக் குறித்துதான் அதிகமாக பெருமை யடித்துக் கொள்கிறோம். " 97. நான் ஒரு பழைய பழமொழியை உங்களிடம் கூறட்டும், “பிசாசு தன்னுடைய திரள் கூட்டத்தை கணக்கிடுகிறான், ஆனால் தேவனோ தம்முடையவர்களை நிறுத்துப்பார்க் கிறார்.” 98. இன்றும் கூட அது உண்மைதான். தேவன் தம்முடைய வார்த்தையால் உங்களை நிறுத்து, நீங்கள் (அவருடைய) தேவைக்கு ஏற்றாற்போல் இருக்கிறீர்களா இல்லையா என்று பார்க்கிறார். திரள்கூட்டத்தைப் பற்றியோ, எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியோ, அது எவ்வளவு பிரபலமற்றதாக இருக்கிறது என்பதைப் பற்றியோ எனக்குக் கவலையில்லை. இது இந்த மணிவேளைக்காக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தேவனுடைய வார்த்தையாக உள்ளது. அது முற்றிலும் சரியே. மக்கள் திரளைக் குறித்தோ, யார் வருகிறார்கள் என்பதைக் குறித்தோ, யார் வருவதில்லை என்பதைக் குறித்தோ எனக்குக் கவலையில்லை. அது அங்கே பிலாத்துவின் நியாயத்தீர்ப்பு மன்றத்தில் இருந்ததுபோலவே, தேவனுடைய வார்த்தையானது ஆபத்தான நிலையில் உள்ளது. அதை நிறுத்துப்பார்த்து, நாம் எவ்வாறு காணப் படுகிறோம் என்றும், நாம் எங்கு குறையக் காணப்படுகிறோம் என்றும் பாருங்கள். ஆம், ஐயா. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். "99.அவர் மோசேயிடம், ""நான் உன்னோடு இருப்பேன், நான் உன்னுடைய வாயை உபயோ கிப்பேன். நீ போய், நான் உனக்கு சொல்லு கிறபடியே, இந்த வார்த்தைகளைப் பேசு, அப்பொழுது இந்த அடையாளங்கள் தங்களைத் தாங்களே வியாக்கியானம்பண்ணிக் கொள்ளும்"" என்று கூறினார் என்பதை நாம் கண்டு கொள்கிறோம். " "100. பாருங்கள், தேவனுக்கு எந்த வியாக்கி யானியும் அவசியமில்லை. ஓ, இல்லை, அவன் வியாக்கியானியாக இருக்கவே கூடாது. தேவனுடைய வியாக்கியானம் தம்மைத்தாமே நிரூபிக்கிறது. அவரே தம்முடைய சொந்த வார்த்தையின் வியாக்கியானியாக இருந்தார் என்றும், அவர் அவ்வாறு இருக்கிறார் என்றும் அவர் கூறினார். அவர் மோசே மூலமாக அதைச் செய்தார், அவர் இன்றைக்கும் அதையே செய்கிறார். நாம் வேதாகமத்தில் அவரை ஏலோகிமாக அறிந்துகொள்கிறோம். ஏலோகிம் என்றால் ""சகலத்திற்கும் போதுமானவர்” என்ப தாகும். யாருடைய ஆலோசனையும் அவருக்குத் தேவையில்லை. யாருடைய உதவியும் அவருக்கு அவசியமில்லை. அவர் தேவன், அவர் வார்த்தையாக இருக்கிறார். வார்த்தையானது எதையாகிலும் வாக்குத்தத்தம் பண்ணி, அதை உங்களுக்கு முன்பாக அடையாளம் காணும்படி செய்யும்போது, அதற்குப் புறம்பே எம்மாதி ரியான வியாக்கியானம் உங்களுக்குவேண்டும்? " "101. ஓ, பாவமுள்ள மனிதனே பெண்ணே, எழுந்து, அது தவறு என்று சொல்ல நீ யார்? தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியைக்கொண் டும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தை யைக்கொண்டும், நம் ஒவ்வொருவர் முன்பாக வும் அதை வியாக்கியானம் பண்ணும்போது, அது தவறு என்று சொல்ல நாம் யார்? ஓ பாவமுள்ள மனிதனே, நீ எப்படி அவ்வாறு கூற முடியும்? ""சகோதரன் பிரான்ஹாம் அவர் களே, 'பாவமுள்ளவனே,' என்பதன் மூலம் நீர் என்ன சொல்ல வருகிறீர்?"" அவிசுவாசம்! ஒரே ஒரு பாவம் மட்டுமே உண்டு, அதுதான் அவிசுவாசம். மனிதனின் முட்டாள்தனமான வியாக்கியானம் தேவையில்லை! " "102. அவர் யாருடைய உதவியுமின்றி தாமே வியாக்கியானம் செய்கிறார். ""நான் கர்த்தர், நான் அதை நட்டேன்; யாரும் அதை என்னுடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ளாதபடி, இரவும் பகலும் அதற்கு நீர்ப்பாய்ச்சுவேன்"" (""I am the Lord,"" He said, ""I planted It; I'll water It, day and night, less some should pluck It from My hand."") அதோடு அவர் வேறொரு வேதவாக்கியத்தில், ""அவர் தம்முடைய வார்த் தையை நிறைவேற்றும்படி (to perform It), அதை விழிப்போடு கருத்தாய் கவனித்துக் கொண்டேயிருந்தார்"" என்று கூறியிருக்கிறார். அதை நிறைவேற்றுதல் (Perform) என்பது அதை ""வெளிப்படுத்துவதாகும்,"" (யாருக்கு?) அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு, யார் காணும்படி அது அனுப்பப்பட்டதோ, இன்னும் சரி யாகச் சொன்னால், யார் அதைக் காணும்படி அனுப்பப்பட்டதோ அவர்களுக்கு அதை ""வெளிப்படுத்துவதாகும். யார் காணும்படி அனுப்பப்பட்டதோ, யார் அதைக் காணும்படி அனுப்பப்பட்டதோ, அவர்களுக்கு அவர் அதை நிறைவேற்றுகிறார் (performs). " "103. அவர் அதை விழிப்போடு கருத்தாய் கவனித்துக்கொண்டேயிருந்து, இந்த முட்டாள் தனமான மாம்சத்திற்குரிய வியாக்கியானங்கள் அனைத்திலிருந்தும், ""இதுதான் சரியானது, அதுதான் சரியானது, அதுதான் சரியானது” என்பவைகளை விட்டும் அதை விலக்கி தூரமாக வைக்கிறார். தேவன் தான் சரி, தேவனால் அடையாளம் காட்டப்பட்ட நபர்! (God's identified person!) " "104. அந்த பரிசேயர்கள் அனைவரும் எழுந்து நின்று, ""நாங்கள் தேவனால் உண்டானவர்கள்! எங்களிடம் நியாயப்பிரமாணங்கள் உள்ளன. எங்களிடம் இது உள்ளது"" என்று கூறியிருக்கக் கூடும். வார்த்தை தாமே அங்கு நின்றிருந்தும், ""இதை அகற்றும்! இதை சிலுவையில் அறையும்! நாங்கள் விசுவாசிப்பவைகளோடு இது தன்னை அடையாளங்காட்டவில்லையே” என்றார்கள். " 105. ஆனால் அது வார்த்தையோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது. ஆமென். காண்பதற்கு கண்கள் இருந்தவர்கள் அதைக் கண்டார்கள். குருடாக இருந்தவர்கள் அதைக் காணவில்லை. 106. இன்றைக்கும் அவர்கள் அதைக் காண மாட்டார்கள். அவ்வளவுதான். அவர்கள் (அவ் விதமே) நடந்துகொள்கிறார்கள், அவர்களில் அநேகர், தங்களை முடக்கிக்கொண்டு, அதி லிருந்து விலகிச் சென்றுவிட்டார்கள். ஓ, ஆமாம், அதை நிறைவேற்றுவதன் மூலம், அது உண்மை என்று காண்பிக்கிறார்கள்! "107. சிலர், ""நான் அதில் நிறைய விசு வாசிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம் அவர் களே, என்னால் வேதாகமத்தை விசுவாசிக்க முடியும். நான் வேதாகமத்தை புரிந்துகொள்கி றேன். நான் வேதாகமத்தை புரிந்துகொள்பவன். நான் இன்ன இன்னதை விசுவாசிக்கிறேன். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அதில் உள்ள எல்லாவற்றையும் என்னால் விசுவாசிக்க முடி யாது, ஏனென்றால் என்னுடைய ஸ்தாபனம் அது அப்படி அல்ல என்று கூறுகிறது"" என்று சொல்லலாம். " 108. அப்படியானால் நீங்கள் எவ்விதமான வியாக்கியானியைப் பெற்றுள்ளீர்கள்? ஏவாள் கொண்டிருந்த அதேவிதமான வியாக்கியானி தான், அவன் தான் பிசாசு. அவன் வார்த் தையை ஏவாளுக்கு வியாக்கியானம் செய்து கொடுக்க முயற்சித்து, ஓ, இதுதான் சரி, அதுதான் சரி, ஆனால் நிச்சயமாக...” என்றான். நிச்சயமாக, சரியே! தேவன் கூறுவது எதுவோ, அதுவே சரி! இது மற்றவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று எனக்குக் கவலையில்லை. அது நடக்கப்போகிறது என்று தேவன் கூறும் போது, அது அப்படியே நடக்கத்தான் போகி றது. நீங்கள் ஏவாளின் வியாக்கியானியை உப யோகிப்பீர்களா? ஓ, பாவமுள்ள மனிதனே, நீ அதை எவ்வாறு செய்ய முடியும்? ஆம், ஐயா. அவர்கள் ஏவாளின் வியாக்கியானியைப் பெற் றிருந்தனர். "109. அத்தாட்சி, நான் அன்றொரு நாள் கூறியபடி, நாம் அத்தாட்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். லூத்தர், ""விசுவாசித்து, நட” என்றார். பிசாசும் கூட விசுவாசிக்கிறான். வெஸ்லியோ, ""சத்தமிடு, அப்பொழுது நீ அதைப் பெற்றுக்கொண்டாய்"" என்றார், ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என் பதைக் கண்டு கொண்டார். பெந்தெ கொஸ்தேயினர், ""அந்நியபாஷைகளில் பேசு, அப்பொழுது நீ அதைப் பெற்றுக்கொண்டாய்” என்றனர். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவ விஞ்ஞானம், ""அன்புகூரு, (அப்பொழுது) நீ ஆவியின் கனியைப் பெற்றுக் கொண்டாய்” என்றார்கள், ஆனால் அவர்களிடம் அது இல்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையே (Divinity) மறுதலிக்கிறார்கள். " 110. அதைக் குறித்த அத்தாட்சி என்ன? உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஆமென் என்று அழுத்த மாகக் கூறி, தேவன் அதை உறுதிப்படுத்தும் போது தான். சரியாக இயேசு கிறிஸ்துவோடும் அது அப்படித்தான் இருந்தது. ஓ, ஆமாம். அவர்களிடம் இருந்தது, அவர்களிடம் அதிக மான ஆவியின் கனிகள் இருந்தன, அவர்க ளிடம் எல்லா விதமான அத்தாட்சிகளும் இருந் தன. தேவன்தாமே தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக் காட்டினாலொழிய நீங்கள் எதனோடும் எந்த அத்தாட்சியையும் பொருத்த முடியாது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கு ஒரே உண்மையான அத்தாட்சி அதுதான். ...போது, நீங்கள் எப்படி ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியும்? "111. ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நம் மத்தியில் வாசம்பண்ணினார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்!” அவர் தாவீதுக் குள்ளிருந்த அதே தேவனே. அவர் மோசேக் குள்ளிருந்த அதே ஒருவர் தான். அப்போஸ்தலர் எல்லாருக்குள்ளும் இருந்த அதே ஒருவர் அவர் தான். வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட அந்த வார்த் தையின் நிமித்தமாக தம்மைத்தாமே வெளிப் படுத்திக்காட்டும்படி, இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஒருவர் அவரே. அவர் இன்றும் அதே தேவனாக, அதே வார்த்தையாக, இந்த மணி நேரத்தின் வார்த்தையின் மேல் வெளிச்சம் விழும்படி செய்து கொண்டிருக்கிறார். தேவன் நம்மீது இரக்கமாயிருப்பாராக! ஆம், ஐயா. தேவன் தம்மைத்தாமே வியாக்கியானம் செய்ய வும், ஒவ்வொரு வார்த்தையையும் மெய்ப்பித் துக் காட்டவும் அவரை விசுவாசிப்போமாக! ஆம், அவரே அவருடைய சொந்த வியாக்கி யானியாக இருக்கிறார். " 112. சகோதரனே, நான் இந்த மணி வேளையைக் குறித்து சிந்தித்துப்பார்க்கிறேன்! நான் இதில் நீண்ட நேரம் தரித்திருக்க முடியும், ஆனால் உங்களுக்கு ஒரு கூட்டம் துவங்க விருக்கிறது. அவ்வாறு தான் நம்புகிறேன், நான் இன்றைக்கே (இதைக்) கூறப்போகிறேன், நாம் கவனம் செலுத்தாமல் போனாலும், அவர் அமெரிக்கர்களாகிய நம் கரங்களில் இருக்கிறார். இதை சிந்தித்துப் பாருங்கள். நான் இதைக் கோபப்படுத்துவதற்காக சொல்லவில்லை; நான் இதை ஒளியின் நிமித்தமாகவே சொல்கிறேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி இன்று அமெரிக்க சபையின் கரத்தில் உள்ளது என்று நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி முழு அமெரிக்காவின் மேலும் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி யானது மெத்தடிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், பெந்தெகொஸ்தேகாரர்களின் மீது உள்ளது. இது நம் எல்லாருடைய கரங்களிலும் உள்ளது. அது இப்போது அவ்வாறு உள்ளதா என்று பார்ப்போம். அதைக் குறித்து சிந்தி யுங்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி! ஓ, என்னே! 113. அன்றையதினம் பிலாத்து அதைத் தன் கையைவிட்டு விலக்க முயற்சித்த மூன்று வழிகளை அது எனக்கு நினைப்பூட்டுகிறது. அவன் அதைத் தன் கையைவிட்டு விலக்கிப் போட, எல்லா மூன்று வழிகளையும் முயற்சித் துப்பார்த்தும், அவன் தோல்வியடைந்தான். அதை உங்கள் கையிலிருந்து அகற்றிப்போட ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு. அவன் என்ன செய்தான் என்று பார்ப்போம். பிலாத்து இந்த மூன்று வழிகளையும் முயற்சித்துப் பார்த்தான், அவை அனைத்தும் தோல்வியடைந்தன. 114. நாம் இந்தப் பிரச்சினையை (issue) எதிர்கொண்டே ஆக வேண்டும். அது இங்கே இருக்கிறது என்று நமக்குத் தெரியும், ஏனெனில் அவருடைய வார்த்தையானது வேத அத்தாட்சியின் மூலமாக அடையாளம் காணப் பட்டு விட்டது. இந்த நாளுக்காக வாக்குத் தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையானது மாம்ச மாகிவிட்டது, இயேசு கிறிஸ்துவை மறுதலிக் கும் தீமையான பாகமும், இந்த லவோதிக் கேயா காலத்தில் அவர் சபைக்கு வெளியே இருப்பதும் கூட (வேத அத்தாட்சியின் மூல மாக அடையாளம் காணப்பட்டுவிட்டது). அது சத்தியம் என்பதை நாம் அறிவோம். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தப் பழியானது நம்முடைய கரங்களில் உள்ளது. நீங்கள்... அதைக்குறித்து சிந்தித்துப்பார்ப்பது என்பது, அது என்னை பயமுறுத்துகிறது. அவரை உருவக்குத்துதல் என்பது, அதைச் சிந்தித்துப் பார்க்கும்போதே, அது பயமாக உணரச் செய்கிறது, இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி! 115. ஒரு மனிதன் தன் சக மனிதனின் இரத்தத்தைப் பார்க்கும்போது. சிறிது காலத் திற்கு முன்பு, ஒருமுறை சிகாகோவில், டில்லிங்கர் கும்பலில் உள்ள ஒருவன் அல்லது அது யாராக இருந்தாலும், வீதியில் சுடப்பட்ட போது, என் நண்பர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். மக்கள் நூற்றுக்கணக்கில் கூடி வந்திருந்தனர், அவர்கள் சுற்றி நின்றுகொண் டிருந்தனர். ஆனால், அவர்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த துப்பாக்கி குண்டு ஊடுருவிச்சென்ற துவாரத்திலிருந்து (வடிந்த), அந்த இரத்தம் அங்கே தெருவில் விரிவாகப் பரவிக்கிடந்தது, எல்லோரும் அந்த இரத்தத் தைச் சுற்றிலும் நடந்து சென்றார்கள். அவர்கள் தங்கள் சக மனிதனின் இரத்தத்தின் மீது நடந்துசெல்ல மாட்டார்கள். ஓ, இல்லை, ஐயா. அவர்கள் அதைக் குறித்து மிகவும் சந்தேகப்படுகிறவர்களாய் (suspicious) இருக்கி றார்கள். "116. ஆனால் அவர்களோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக நடப்பார்கள். இந்தப் பழங்கால பழமொழி இன்னும் உண்மைதான், ""தேவதூதர்கள் மிதித்து நடந்து செல்ல பயப்படுகிற இடத்தில், முட்டாள்கள் தலையாணிகள் பதித்த காலணிகளை (அணிந்து) நடப்பார்கள்.” அது சரியே, அவர் கள் சரியாக அதன் மீது நடந்து சென்று, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்போஸ்தலர் களுக்கெல்லாம் அது சரிதான், ஆனால் நமக்கு அல்ல"" என்று கூறுவார்கள். ஓ, என்னே, உங்களால் எவ்வாறு அதைக் கூற முடிகிறது? உங்களைப் பரிசுத்தம்பண்ணின இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உங்கள் காலின்கீழ் மிதிக்கிறீர்கள்! ஓ, என்னே, அந்த இரத்தப்பழி நம்முடைய கரங்களில் உள்ளது என்பதை சிந்தித்துப்பாருங்கள்! " 117. என்ன, ஒரு மனிதனுடைய நண்ப னின் இரத்தப்பழி. நீண்ட காலத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன், சில வாரங்களுக்கு முன்பு, இது நம் நாட்டில் நடக்க முடியாது என்று நாம் நினைத்தோம். ஆஸ்வால்ட், இந்த மனிதனைக் குறித்து என்ன? அவன் தன் சரியான மனநிலையில் இருப்பான் என்றால், அங்கே அந்தச் சிறைச்சாலையில் இருந்தபடி, பதட்டத்தோடு அதற்காக காத்துக்கொண்டிருப் பான். 118. இந்த ஒலிநாடாவை கேட்கவோ, அல்லது இங்கு எங்கோ உட்கார்ந்தபடி இந்தச் செய்தியை கேட்டு, இதை ஆமோதித்து, இதினிமித்தம் பதட்டத்தோடு காத்துக்கொண்டிருந்து, நீங்கள் நியாயத்தீர்ப்பில் வந்தாக வேண்டும் என்றும், உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைக்கும், இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழிக்கும் நீங்கள் பதில் கூறியாக வேண்டும் என்றும், (அது) உங்கள் கரங்களில், நமது கரங்களில் உள்ளது என்றும் அறிந்துகொள்ளும் ஒரு மனிதனைக் குறித்து நான் சிந்தித்துப்பார்க்கிறேன். 119. அங்கேயிருக்கும் ஆஸ்வால்டை கவனியுங்கள், அவனுக்கு அது என்னவொரு பயங்கரமான காரியமாக இருக்க வேண்டும் அல்லது இருந்திருக்க வேண்டும், அல்லது அது அவ்வாறு தான் இருந்தது என்று ஊகிக்கிறேன், அவர்களுடைய ஜனாதிபதியை கொலை செய்த காரணத்திற்காக கோபத்தோடு கூடிய ஒரு சினங்கொண்ட உச்சநீதிமன்றத்தை அவன் எதிர் கொள்வான் என்பதை அவன் நினைத்துப் பார்க்கும்போது. அங்கே எந்த இரக்கமும் இருக் காது. அவனுக்கு விரோதமாக அவர்களிடம் இருக்கக்கூடிய எந்த ஆதாரமும், அது அவ னுக்கு எதிராக திணிக்கப்படும். கைரேகைகள், துப்பாக்கி, அவன் இருந்த இடம், அனைத் துமே அவனுக்கு முன்பாக கொண்டு வரப் படும். 120. இந்தக் கூட்டங்களில் அமர்ந்து, இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனின் (His Being) ரூபத்தில் உயிர்த்தெழுந்து, தம்மை அடையாளம் காண்பிப்பதை கண்டும், அவரை ஏற்றுக் கொள்ளாமல் வெளியே நடந்துசென்று, ஏதோ கொஞ்சம் கோட்பாட்டையோ, அல்லது கீழ்த்தரமானது என்று நீங்கள் அழைக்கும் ஏதோவொன்றையோ பற்றிக்கொண்டிருக்கும் ஜனங்களுக்கு சம்பவிக்கப் போகிறதை (பார்க்கும் போது), அது ஒரு மிகச்சிறிய காரியம் தான்....ஐ காலால் மிதித்துப்போட்ட நீங்கள், அவருடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தை காலால் மிதித்து, உங்கள் சிந்தையில் அவரை மறுபடியும் சிலுவையில் அறைந்து, புகழ் பெறுவதற்காக உங்கள் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட (swapped) நீங்கள், கடுங் கோபமுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கும்போது, அது ஒரு மிகச்சிறிய காரியமாகத்தான் இருக்கும். அந்த நாளில் அது ஒரு பயங்கரமான காரியமாக இருக்கப்போகிறது. அது ஒரு பயங்கர எண்ணமாக இருக்கும். அந்த அடிமை சிறைச்சாலையில் நீங்கள் எவ்வாறு இருக்க முடிகிறது? 121. இந்த ஒலிநாடாவைக் கேட்கும் ஆப்பிரிக்காவில் வசிப்பவர்களே; ஆஸ்திரே லியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர் களே, நான் உங்கள் தேசங்களில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவின் அடையாளம் ஜனங்கள் மத்தியில் வெளிப்பட்டு (rising), தம்மை நிரூபித்துக் காட்டுவதை நீங்கள் கண்டிருக்க, நியாயத்தீர்ப்பின் நாளிலே நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்? 122. என்னே, அவன் இளைப்பாறுதல் அற்றவனாய் கவலையோடும், நடுக்கத்தோடும் இருக்க வேண்டும்! ஓ, அவன் தன் சரியான மனநிலையில் இருந்திருந்தால், எவ்வாறு அவன் அதைச் செய்ய முடிந்திருக்கும்? 123. தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, அவரை மீண்டும், மறுபடியுமாக சிலுவையில் அறைந்தவர்களுக்கு, எம்மாதிரி யான கோபமுள்ள தேவன் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? 124. கவனியுங்கள், ஒரு விமானி, விமானத்தை ஓட்ட ஆயத்தமாகும்போது. ஒரு விமானி ஒரு விமானத்தை வெளியே எடுத்து, அவன் புறப்பட்டு போவதற்கு முன்பு, எல்லாவற் றையும், ஒவ்வொரு கருவியையும் பரிசோதித்துப் பார்ப்பான். அவன் வெளியே ஓடுபாதைக்குச் சென்று, அங்கே நின்று, விமானத்தின் இறக்கைகளை கட்டுப்படுத்தும் மூடிகளையும், அவன் ஓட்டும் விமானத்தின் எரிபொருள் செலுத்தும் துவாரத்திற்கு மேலிருக்கும் சிறுமூடிகளையும் பரிசோதித்துப் பார்ப்பான். எல்லாவற்றையும், அவனிடம் இருக்கும் ஒவ்வொரு கருவியையும், மீண்டும் மீண்டும் பரிசோதிக்கிறான். உங்களில் அநேகர் விமா னங்களில் பயணம் செய்திருக்கிறீர்கள், அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு கருவியையும் சரிபார்க்கிறான். ஏன்? அவன் தன் சக மனிதனின் இரத்தப்பழியை தன் கரங்களில் பெற்றிருக்கிறான். சாத்தியமான அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா என் பதை அவன் உறுதிப்படுத்த விரும்புகிறான். 125. ஒரு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர், அவர் அறுவைசிகிச்சை செய்து, ஒரு கட்டியை எடுக்கப்போகிறார் என்றோ அல்லது இதய அறுவை சிகிச்சையோ, அல்லது வேறு ஏதாவது அறுவை சிகிச்சையோ செய்யப் போகிறார் என்று அவர் அறியும்போது, அவரைக் குறித்து என்ன? அவர் உங்கள் சரீரத்தில் அறுவை சிகிச்சை செய்யப் போகும்போது, அவர் உங்கள் இதயத்தை பரிசோதிப்பார், உங்கள் இரத்த அழுத்தத்தைச் பரிசோதித்துப் பார்ப்பார், உங்களுக்கு ஏதேனும் சளி இருக்கிறதா என்று பரிசோதிப்பார், அவர் மயக்க மருந்துகளைச் சரிபார்ப்பார். அவர் எல்லாவற்றையும், மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டுமாக பரிசோதித்துப் பார்க்கிறார். ஏன்? தன் சக மனிதனின் இரத்தப்பழி அவன் கையில் இருப்பதை அவன் விரும்பவில்லை. 126. ஒரு மருத்துவரும், விமானியும், அதைப்போன்ற மற்றவர்களுமே பரிசோதித்துப் பார்ப்பார்களானால், இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காரியங்களைப் பார்க்கும் போது, இயேசு கிறிஸ்துவின் சபை என்ன செய்ய வேண்டும்? நாமும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது (We had better check). இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி நம்முடைய கரங் களில் விடப்படலாம். 127. இப்போது நாம் ஒரு காரியத்தை, 'இவனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை” என்ற பிலாத்துவின் முதலாவது திட்டத்தை (first scheme) எடுத்துக் கொள்வோம். "128. இன்று அநேக அருமையான கூட் டத்தாரின் மத்தியில் அது எப்படியாக உள்ளது! ""வார்த்தையில் எந்த தவறையும் நான் காண வில்லை. அதெல்லாமே சரியாக உள்ளது, ஆனால் அது அப்போஸ்தலர்களுக்குரியது வேதாகமமோ அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது! நீங்கள், ""அந்த வேதாகமம் சரியாகவே உள்ளது. அவர்கள் அந்நியபாஷைகளில் பேசினார்கள் என்று விசுவாசிக்கிறேன்; அவர்கள் பிசாசு களைத் துரத்தினார்கள் என்று விசுவாசிக் கிறேன்; அவர்கள் சிந்தனைகளைப் பகுத்தறிந் தார்கள் என்று விசுவாசிக்கிறேன்; அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள் என்று விசுவா சிக்கிறேன்; ஆனால் இன்று அவ்வாறு கிடை யாது” என்று கூறுகிறார்கள். ஒ, மிஸ்டர், பாவ முள்ள மனிதனே, உனக்கு என்ன நேர்ந்தது? " மத்தேயு 28-ம்... மத்தேயு 24:24 இருக்கும் போது, என்ன தான் நடக்கிறது? எபிரெயர் 13:8 மீண்டும் உங்கள் மடியிலேயே திரும்ப வரு கிறது. 129. பிலாத்துவால் அவ்விதமாக அதைத் தன் கைகளிலிருந்து கழுவிப்போட முடியவில்லை. இல்லை, ஐயா, அது மீண்டும் திரும்ப அவனது மடியிலேயே வந்துவிட்டது. நீங்கள் நின்று, கொண்டு, தேவன் தம்முடைய வாக்குத் தத்தத்தை காத்துக்கொள்வதை காணும் போது, அது அவ்விதமே ஒவ்வொரு மனிதனிடமும் திரும்ப வந்துவிடும். "130. பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு, ""நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத் தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவ னாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள வர்களுக்கும் உண்டாயிருக்கிறது"" என்றான். " "131. எவ்வளவு தூரத்திற்கு? உலகமெங்கும், ஒவ்வொரு தேசத்திற்கும். அது ஒவ்வொரு தேசத்திற்கும் என்று கூறினான். “உலகமெங்கும் போங்கள்.” அது இன்னும் அங்கு சென்றடை யவில்லை. ""சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்."" " 132. அதை எவ்வாறு உங்கள் கைகளிலிருந்து கழுவிவிடப் போகிறீர்கள்? உங்களால் அதைச் செய்ய முடியாது. அது நிரூபிக்கப்பட்ட ஒன்று, அது உங்கள் மடியிலேயே மீண்டும் வந்துவிடும். அது மீண்டும் பிலாத்துவிடம் வந்ததைப் போன்று, கழுவிப்போட்ட உங்களிடமே அது திரும்பவும் வந்துவிடும். ஓ, ஆம், ஐயா, வேதவாக்கியமானது சரியாக உங்கள் முன்னால் அடையாளம் காணப்படுவதை நீங்கள் காணும் போது, அது மீண்டும் உங்களிடமே திரும்ப வந்துவிடுகிறது. 133. நாம் முடிக்கையில், இரண்டாவதாக. நாம் இரண்டாவதாக காண்பது என்னவென்றால், பிலாத்து வேறொரு வழியில் செய்ய முயற்சித்து, அதை அவனுடைய ஏரோதிடமும் சீசரிடமும் (Caesar's) ஒப்படைக்க முயன்றது போல, இன்றும் ஜனங்கள் அதையே செய்கிறார்கள். இன்று எபிஸ்கோபாலியன், பிரஸ்பிட்டேரியன், லூத்தரன், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே, மற்றும் இன்னபிறவற்றில் உள்ள அநேக அருமையான ஊழியக்காரர்கள், “நான் அதைச் செய்ய என்னுடைய தலைமையிடம் (headquarters) அனுமதிக்காது' என்று அதை ஒப்படைத்துவிடுகிறார்கள். அதுவோ ஒப்ப டைத்த அவர்களிடமே வந்துவிட்டது. அது இன்றைக்கும் ஒப்படைத்த அவர்களிடமே மீண்டும் வந்துவிடுகிறது. 134. நான் அசெம்பிளிஸ் ஆப் காட், ஒருத்துவக்காரர்கள், சர்ச் ஆப் காட், மெதோ டிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன் களிடம் கேட்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வைத்து என்ன செய்கிறீர்கள் என்று தனிப்பட்ட நபராக உங்களிடம் தான் கேட்கி றேன். இந்த மணிவேளைக்கான வாக்குத்தத்த மாகிய கிறிஸ்து என்றும், அது அவ்விதம் தான் இருக்க வேண்டும் என்றும் நாம் அறிந்திருக் கிற, நமக்கு முன்பாக இருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையை வைத்துக்கொண்டு இன்று நாம் என்ன செய்வோம்? அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை வைத்து உங்க ளுடைய சபை என்ன செய்கிறது என்பதல்ல. உங்கள் சீசர் (Caesar) மற்றும் உங்கள் ஏரோ துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. அது பிலாத்துவுக்கு சாக்குப்போக்காக இருக்கவில்லை. இல்லை, ஐயா. இல்லை, ஐயா. "135. அந்நாளிலிருந்த பரிசேயர்கள், இவ னுடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக"" என்றார்கள். அது அவ்வாறு தான். அது சரியாக இருக்கிறது. " "136. அவர், இயேசு அவர்களிடம் என்ன சொன்னார்? ""வானத்தின் தோற்றத்தை நிதா னிக்க உங்களால் கூடுமே, ஆனால் காலத்தின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் முடிய வில்லை.” " 137. ஓ, நான் பீனிக்ஸ் பட்டணத்திற்கு இதைச் சொல்லவில்லை, ஆனால் இது செல்ல விரும்பும் எவ்விடத்திலுமுள்ளவர்களுக்காக இதைக் கூறுகிறேன். குருடரான பரிசேயர்களே! நீங்கள் எவ்வாறு மில்லியன்கணக்கான டாலர் களைச் செலவழித்து, கம்யூனிசத்தை நிதானிக்க முடிகிறது; ஆனால் இந்த மணிநேரத்திற்கு நிரூபித்துக்காட்டப்பட்ட தேவனுடைய வார்த் தையை உங்களால் நிதானிக்க முடியவில் லையே? நீங்கள் அதை மீண்டும் சிலுவையி லறைகிறீர்கள். கம்யூனிசத்தைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியும்; நீங்கள் உங்கள் வேதா கமத்தை அறிந்திருந்தால், அந்தக் காரியம் சம்ப வித்தாக வேண்டுமென்று அறிந்திருப்பீர்களே. அதில் எனக்கு ஆர்வமில்லை. நான் கம்யூ னிசத்தை வெறுக்கிறேன். தேவனுக்கு விரோத மான எதையும் நான் வெறுக்கிறேன். ஆனால் மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுவதற்கென்று (for the going away of the Bride), சபையானது இந்த மணிவேளைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதில் தான் என்னுடைய ஆர்வம் உள்ளது. "138. ""வானத்தின் தோற்றத்தை நிதானிக்கிறீர்கள், ஆனால் காலத்தின் அடையாளங்களையோ உங்களால் நிதானிக்க முடியவில்லை.” " "139. இந்த சபைகளின் ஆலோசனை சங்கத் தையும் (Council of Churches), மற்றும் எல்லாவற்றையும் ஏற்படுத்த, இன்றைக்கும் கூட்டாட்சி நீதிமன்றங்களில் அவரது வழக்கு விசாரணை நடந்துகொண்டு தான் இருக்கிறது. பிரசங்கிமார்கள் பிரசங்கித்துக்கொண்டிருக்கும் கம்யூனிஸத்தையும் மற்றும் இவைகள் எல்லா வற்றையும் உங்களால் நிதானிக்க முடிகிறது; காலத்தின் அடையாளங்களையோ முற்றிலுமாக அசட்டை செய்து, அதை ஒரு மூடபக்தி வைராக்கியம்' என்றோ, அடுத்தவர் மனதி லுள்ளவைகளை அறியும் சிறப்பாற்றல் (mental telepathy)"" என்றோ, அல்லது அதைப்போன்ற எதுவாகவோ அழைத்துக்கொண்டு, நடந்து செல்வதோடு, அவர்களுடைய ஜனங்கள் வந்து அதைக் கேட்பதற்கும் கூட தடைசெய்கிறார்கள். சரித்திரம் மறுபடியும் நிகழவில்லை என்றால், நான், என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாமே அல்ல. (அது) முற்றிலும் சரி. என்ன நடக்கப் போகிறது? அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மீண்டும் கரங்களுக்கே திருப்பி உங்கள் அனுப்பிவிடுகிறது, அப்போது அவர்கள் அழைத்ததுபோலவே, நீங்கள் அதை ஒரு “அசுத்த ஆவி” என்றே அழைக்கிறீர்கள். " "140. உலகம் முழுவதும்! அப்போது நான் என்ன சொல்ல வந்தேன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். எல்லா இடங்களிலும்! சுவிட்சர்லாந்தில் நீங்கள் ஏன் என்னை புறக்கணித்தீர்கள்? பின்லாந்தில், நீங்கள் ஏன் என்னை நிராகரித்தீர்கள்? உங்கள் சொந்த கரங் களில் இரத்தப்பழி இருக்கப் போகிறது. அது உங்கள்மேல் தான் உள்ளது. என்னை அல்ல, நீங்கள் ஒருபோதும் என்னைப் புறக்கணிக்க வில்லை; அவரைத் தான் புறக்கணித்தீர்கள், என்னை அல்ல, ஏனென்றால் ""அப்படிப்பட்ட வற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சொன்னீர்கள். அப்படிப்பட்டதை வார்த்தை கூறுகிறதே! அங்கேதான் காரியம். குருடரான பரிசேயர்களே, அவர்களால் கம்யூனிசத்தையும், இவைகள் எல்லாவற்றையும் நிதானிக்க முடி கிறது, ஆனால், தாங்கள் வாழ்ந்து கொண் டிருக்கும் மணிநேரத்தையோ அவர்களால் நிதா னிக்க முடியவில்லை. அது முற்றிலும் சரியே. " 141. இப்போது அது மீண்டும் அதன் (என்னே!) இறுதி இலக்கை அடைய உள்ளது. மிக மிக முக்கியமான அந்த மணி நேரம் மீண்டும் இங்கு வந்துவிட்டது. அது என்ன? இவனைச் சிலுவையில் அறையும்! நாங்கள்... செய்வோம். நம்மால் இவர்கள் அனைவரையும் மெத்தடிஸ் டுகளாக்க முடியாது; நம்மால் இவர்கள் எல்லாரையும் பாப்டிஸ்டுகளாக்க முடியாது; நம்மால் இவர்கள் அனைவரையும் ஒருத் துவக்காரர்களாக்க முடியாது; நம்மால் இவர்கள் அனைவரையும் திரித்துவக்காரர்களாக்க முடி யாது; நம்மால் இவர்கள் அனைவரையும் இது வாகவோ, அதுவாகவோ, அல்லது மற்ற தாகவோ ஆக்க முடியாது; ஆனால் நாம் ஒரு ஆலோசனை சங்கத்தைக் கொண்டிருக்கலாம்.” அங்கு, நீங்கள் கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறீர்களே, அந்த முழு காரியமும் தவறாக உள்ளது. அது ரோமா புரியை பின்பற்றிப் போகும் ஒன்று தான். அது முற்றிலும் சரியே. 142. இப்பொழுது, ஒரு தனிநபராக, நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். இந்த நாளுக் கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த் தையாகிய, கிறிஸ்து என்ற இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு தனிநபராகிய உங்களிடம் தான் கேட்கிறேன்? 143. பிலாத்து அதை ஒருபோதும் தன் கரங்களை விட்டு அகற்றிப் போடவேயில்லை. அது உங்களுக்குத் தெரியும். அவன் கதறினான், கண்ணீர்விட்டு அழுதான், அவன் தன்னால் செய்ய முடிந்த ஒவ்வொரு திட்டத்தையும் (செய்தும்), அதைச் செய்வதில் தோல்விதான் அடைந்தான். சுவிட்சர்லாந்தில் ஒரு புராணக் கதை உள்ளது, அங்கு... அவன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் நீல நிற தண்ணீர் மேலே வருகிறது. அதைக்குறித்த வரலாறு உங்களுக்குத் தெரியும். முடிவில் அவனுக்கு பைத்தியம் பிடித்து, அவன் தற்கொலை செய்து கொண்டான். அவன் ஏன் மனந்திரும்ப வில்லை? ஏசாவால் மனந்திரும்ப முடியாதது போன்று, அவனாலும் மனந்திரும்ப முடிய வில்லை (He couldn't repent, no more than Esau could repent). அவன் அதைச் செய்திருந்தான்! அது உங்களுக்கும் நடக்க விடாதீர்கள். 144. அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். கிரியைகள் செய்து முடிக்கப்பட்டாயிற்று, வேதாகமம் பிரசங்கிக்கப்பட்டு, பரிசுத்த ஆவி யானவர் அதை அடையாளம் காட்டியுமிருந் தார். இந்தக் கடைசி நாட்களில் பரிசுத்த ஆவி யானவர் அவ்வண்ணமாக செய்யவில்லை என்று பாவமுள்ள எந்த மனிதனும் உங்களிடம் கூறத் துணியமாட்டான்! (Any sinful man, dare you to say It isn't so, the Holy Ghost in this last days!) உரைக்கப்பட்ட வார்த்தைகள், அது நிறைவேறும் என்று கூறியுள்ளது, இதோ அது சரியாக நமக்கு முன்னால் நிகழ்கிறது. 145. அவ்வாறு செய்ய முயற்சிக்க வேண்டாம். உங்கள் முடிவு பிலாத்துவைப் போன்று இருக்க வேண்டாம். இல்லை. அவன் தன் இருதயத்தில் அவரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அவரை உங்கள் கைகளிலிருந்து அகற்றமுடிந்த ஒரே வழி, அவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்வது தான். ஓ, அதே தவறைச் செய்து விடாதீர்கள். 146. கவனியுங்கள், எபிரெயர் 10 இதைக் கூறுகிறது, 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்தால்,” மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால், 'பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராது.” இது உங்களுக்கு அடையாளம் காணப்பட்ட பிறகும், நீங்கள் வேண்டுமென்றே பாவஞ்செய்து, பின்னர் அதைப் புறக்கணித்து விடுவீர்களானால், நீங்கள் ஒருபோதும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பே இல்லை. 147. ஒரு நிமிடம் பொறுங்கள், முடிப்ப தற்கு முன்பாக, நான் உங்களிடம் கொண்டுவர விரும்பும் ஒரு குறிப்பு இங்கே என்னிடம் உள்ளது. "148. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போகும் பாதையில் இருந்த அந்த வேவு காரர்களைப் போன்று. அவர்கள் ஒரு யாத்திரை யில் இருந்தனர், (அவர்கள்) எகிப்தைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர், வாக்குத்தத் தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலமாக வெளியே வந்தனர். தேவன் தம்முடைய வார்த்தையை தீர்க்கதரிசியாகிய மோசே மூலமாக தெரியப்படுத்தி, அவனை அங்கு அனுப்பினார். இருக்கிறேன்"" என்ற அவர் வாக்குத்தத்தம் செய்திருந்த நிபந்தனைகளின் கீழ் அவனை வெளியே கொண்டுவருகிற தேவன் அவரே என்று அவனுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டிருந்தது. " "149. அவர்கள் காதேஸ்பர்னேயா என்ற எல்லை பகுதிக்கு வந்தபோது, அவர்கள் தேசத்தை அடைந்து, வாக்குத்தத்தம்பண்ணப் பட்ட தேசத்தைப் பார்வையிட்டு, ""நம்மால் அதைக் கைப்பற்ற முடியாது” என்று கூறிய போது, அவர்கள் பெரிய தவறைச் செய்தார்கள். மற்ற பத்து பேர் என்ன (செய்தார்கள்)? அவர்கள் சூழ்நிலைகளை, தாங்கள் இழக்கப் போகும் கௌரவத்தை தான் பார்த்தனர். “அவர்கள் பார்வையில், நாங்கள் வெட்டுக்கிளிகளா யிருக்கிறோம்.” " "150. யோசுவாவும் காலேபும் நன்கு ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்கள் வார்த்தையிடம் திரும்பிச் சென்றனர், கர்த்தரோ, ""இந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்! இது பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசம்"" என்று சொல்லியிருந்தார். அது எவ்விதம் காணப்பட்டது என்றோ, இது எவ்வாறு இருந்தது என்றோ, இந்த அத்தாட்சி எப்படி இருந்தது என்றோ அவர்கள் எண்ணிப் பார்க்கவேயில்லை. தேவனுடைய வார்த்தை, ""நான் அதை உங்களுக்குக் கொடுக்கிறேன்! போய் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறியிருந்தது. அவர்கள் மட்டுமே உட்பிர வேசித்தனர். " 151. ஓ, நாம் இன்றைய நாளுக்கான தேவனு டைய வாக்குத்தத்தங்களை சரியா என்று நன்கு ஆராய்ந்துபார்ப்போம். அது சரியே. நாம் இன்னொரு யாத்திரையின் நேரத்தில் இருக்கி றோம் என்பது நினைவிருக்கட்டும்; இந்த முறை பூமியிலுள்ள வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட ஒரு தேசத்திற்குள் (போகும்) ஒரு யாத்திரை அல்ல, மாறாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மகிமையின் தேசத்திற்குள் (செல்லும்) யாத்திரையாகும், அங்கிருந்து நாம் மறுபடியும் திரும்பிவரவே மாட்டோம். தேவனுக்கு மகிமை, நாம் அங்கு இருக்கத்தான் போகிறோம்! [ஒலிநாடாவில் காலியிடம்] நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், நீங்கள் அதைச் செய்வீர்களா? "152. ஒவ்வொரு மனிதனும் பெண்ணும் அமைதியாக இருக்கையில், இந்தக் கேள்வியை நான் கேட்கப் போகிறேன். கிறிஸ்து என்னப் பட்ட இந்த இயேசுவை நீங்கள் என்ன செய் வீர்கள்? நீங்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஒரு.. ஆக இருப் பீர்களா. அல்லது, உங்கள் கைகளை விட்டு அவரைக் கழுவி அகற்றி விடுவீர்களா? ""நல்லது, என்-என்னுடைய கோட்பாடு இதைக் கூறுவது கிடையாது"", என்றோ, அல்லது, ""என்னுடைய ஸ்தாபனம் அதை அவ்விதமாக விசுவாசிப் பதில்லை"" என்றோ நீங்கள் கடந்து செல்ல முயற்சிப்பீர்களா? இது உங்கள் கரங்களில் உள்ளது. நீங்கள் அதிலிருந்து தப்ப முடியாது. கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த வாரம் இந்தக் கூட்டத்தில் இருந்தது முதற்கொண்டு, அவருடைய இரத்தப்பழி உங்கள் உங்கள் கரங்களில் உள்ளது. " நாம் ஜெபிப்போமாக. "153. கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது இந்த மணி நேரத்தில் எங்களுக்கு உதவிசெய்தருளும். உமது கிருபையும் இரக்கமும் எங்க ளோடு கூட இருப்பதாக. கர்த்தாவே, நீரே தேவன் என்றும், உம்மைத்தவிர வேறொருவரும் இல்லை என்றும் இந்தச் சபையார் காணட்டும். கர்த்தாவே, நீரே தேவன் என்றும், நான் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்றும் அறியப்படும்படி, இப்பொழுது தேவனுடைய வல்லமை(யான), வார்த்தையானது இந்த ஜனங்களிடத்தில் தன்னை அடையாளம் காட்டுவதாக. எலியா நீண்ட காலத்திற்கு முன்பு, இவை எல்லாவற்றையும் உம்முடைய கட்டளையின் படியே செய்தேன்"" என்று கூறியது போல, நானும் உம்முடைய கட்டளையின் படியே இதைச் செய்தேன். கர்த்தாவே, அது அவ்வண்ணமாகவே நடக்கும் படி அருளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். " இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தலைகளை வணங்கியவாறு இருங்கள். "154. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, நான் ஜெபிக்கத் தொடங்கிய போது, பரிசுத்த ஆவியானவர் என்னை நிறுத்தினார். அவர், இன்னும் அதை அறிந்திராத சிலர் இங்கே யிருக்கிறார்கள்"" என்றார். பரலோகத்தின் தேவன் தாமே உங்களை எதுவும் இல்லாமல் இங் கிருந்து போகும்படி செய்வாராக, அப்படி யானால், இன்றைக்கு அவர் அதை உங்கள் மடியிலேயே மீண்டும் வரும்படி செய்வாராக. " "155. இங்கேயிருக்கும் நோய்வாய்ப்பட்டவர் களே. வர்த்தக புருஷர்களின் கூட்டத்தில் நான் இதை ஒருபோதும் செய்ததில்லை. தேவனை விசுவாசித்து, அவருடைய வஸ்திரத்தை தொடு வதற்கு உங்களிடம் விசுவாசமுண்டென்று விசுவாசிக்கும், இங்கிருக்கும் வியாதிப்பட்டவர் களே. வேதாகமம், எபிரெயர் 4-ம் அதிகா ரத்தில், ""தேவனுடைய வார்த்தையானது இரு புறமும் கருக்குள்ள பட்டயத்தைப்பார்க்கிலும் கருக்கானதாயும், இருதயத்திலுள்ள சிந்தனை களைப் பகுத்தறிகிறதாயும் இருக்கிறது” என்று கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். நம் அனைவருக்கும் அது தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஜெபிப்பீர்களா? " 156. இனிமேல் ஒருவரும் முன்னோக்கி வராதீர்கள். எல்லாரும் மிக பயபக்தியாகவும், மிகவும் அமைதியாகவும், மிக சந்தடியில்லா மலும் இருக்கட்டும். ஜெபம் செய்யுங்கள். என்ன செய்ய வேண்டுமென்றும், என்ன பேச வேண்டுமென்றும் பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது நம்மை வழிநடத்துவாராக, ஏனென்றால் இந்த மிக முக்கிய மணிநேரம் இப்போது இங்கே நம்மேல் உள்ளது. 157. கர்த்தராகிய இயேசுவே, அது உம்மு டைய கரங்களில் உள்ளது. நான் உம்முடைய கரங்களில் இருக்கிறேன். நான் என்னை உம் மிடம் ஒப்புவிக்கிறேன். கர்த்தாவே, அதை அவர்கள் மடியிலேயே மீண்டும் வரும்படி செய்து, அதை திரும்பவும் வரச்செய்தருளும். நிச்சயமாக, உமது மகத்தான பரிசுத்த ஆவி யானவர் எது சரி என்றும் எது தவறு என்றும் இங்கு என்னிடம் கூறுகிறார். இந்த ஒலிநாடா அங்கு வெளியில் அநேகரைச் சந்திக்கப் போகிறது என்பதை நான் அறிவேன், நான் அவர்களிடம் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்றும், கர்த்தருடைய தூதனானவர் அங்கே அக்கினிஸ்தம்பத்தில் நின்றுகொண்டிருந்தபோது, நீர் அந்நேரத்திலே அந்த ஆற்றில் கூறினது போல, நான் இதற்காகவே அனுப்பப்பட்டுள் ளேன் என்றும் நீர் இன்று தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன். நான் சத்தி யத்தையே கூறியிருக்கிறேன் என்று இன்றைய தினம் அறியப்படுவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. ஆமென். 158. இப்போது உங்கள் தலைகளை உயர்த் துங்கள். இவ்விதம் பாருங்கள், சந்தேகப்படா தீர்கள். சர்வவல்லமையுள்ள தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருக்கிறார். 159. இயேசு கிறிஸ்து இங்கே பூமியில் நின்றபோது! அவர் மரித்தபோது, வியாதியஸ் தர்களைச் சுகப்படுத்தினார், இழக்கப்பட்டவர் களை இரட்சித்தார். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? ஆனால் அவர் இங்கு இருந்தபோது, அவர் தான் என்று எங்ஙனம் அவர்கள் அறிந்து கொண்டனர், ஏனென்றால் அவர் வார்த்தையாக இருந்தார். அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் வார்த்தையாக இருந்தார், வார்த்தையானது இருதயத்திலுள்ள சிந்தனைகளை பகுத்தறிகிறது. அது சரிதானா? 160. இங்கே பின்னாலிருக்கும் இந்த மேய்ப்பர் களையும், இவர்களைப் போன்ற மற்றவர் களையும் தவிர, எனக்குத் தெரிந்த ஒரு நபரையும் இந்நேரத்தில் என்னால் இக்கட்டிடத் தில் காண முடியவில்லை. "161. அல்லது, ஒருக்கால் சகோதரர் ராபர்ட்ஸ் அவர்கள் இங்கே இருக்கலாம், நான் அவரை ஒரு ஜெப வரிசையை தொடங்கச் செய்வேன். சகோதரர் ராபர்ட்ஸ் அவர்கள் அங்கே பின்னால் இருக்கிறாரா? [யாரோ ஒருவர், ""இல்லை"" என்று கூறுகிறார்] அவர் இங்கே இல்லை.சரி. " 162. இந்த முறை என் ஊழியம் (அதைச்) செய்யும். நான் வார்த்தையைப் பற்றி சத்தி யத்தையே கூறியிருக்கிறேன் என்று என்னை விசுவாசிப்பதற்கும், நான் கூறியது சத்தியம் தான் என்று விசுவாசிக்கும்படியாகவும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? அது (அவ்வாறே) இருப்பதாக, கர்த்தாவே, அது (அவ்விதமே) இருக்கட்டும். 163. இங்கே ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். நீங்கள் உங்கள் கண்களைத் திருப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அந்த ஒளி அங்கே தொங்கிக்கொண்டிருப்பதை உங்களால் காண முடியவில்லையா? அங்கே ஒரு மனிதர் உட்கார்ந்து, என்னைப் பார்த்துக் கொண்டே, ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் நுரையீரல் கோளாறினாலும், பலவீனத்தாலும் அவதிப் படுகிறார். அதைத் தவறவிட்டு விடாதீர்கள், ஐயா. திரு. கார் (Mr. Carr), எழுந்து உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உம்மை சுகமாக்குகிறார். நான் இந்த மனிதரை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதில்லை. 164. அங்கே பின்னால் மிக அருமையான ஒரு மனிதர் இருக்கிறார், அவரும் கூட ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த மனிதருக்கு என்ன பிரச்சனை, அங்கேயிருக்கும் அந்த மனிதருக்கு கண்ணில் கோளாறு உள்ளது. அவருடைய இடது பக்கத்தில் ஒரு சதை வளர்ச்சி உள்ளது. அவரது பெயர் திரு.பார்ட்லெட். நீர் விசுவாசிக்கிறீர்! அது சரிதானே, ஐயா? நான் உமக்கு அந்நியன் தானா? உமது கையை அசைத்துக்காட்டும்; நாம் அனைவரும் அந்நியர்கள். அது சரியே. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. விசுவாசியும், (அப்பொழுது) நீர் சுகமடைவீர். நீர் விசுவாசிக்கிறீர்! 165. நீர் எதற்காக அதை அவரிடம் சொன்னீர்? ஐயா, நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீரா? ஆம், ஐயா. நீர் ஆவிக்குரிய விதமாக மன அமைதி கெட்டுப் போன நிலையினாலே அவதிப்பட்டு வருகிறீர், வியாபாரம் மற்றும் காரியங்களில் சற்றே ஏமாற்றமடைந்தவராயிருக்கிறீர். அது சரி. அது சரியே. திரு.கிளாஸன், இயேசு உங்களுக்காக அதை சரியாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பெயர் அதுதானா? உங்கள் இடமும் அது தானே? சரி, நீங்கள் கேட்டுக்கொண்டதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆமென். 166. இங்கே உள்ள யாரோ ஒருவர் அதை விசுவாசிக்கிறார், ஆமென், உண்மையான பரிசுத்த ஆவி விசுவாசத்தைக்கொண்ட யாரோ ஒருவர். 167. திருமதி.வால்ட்ரோப், நான் அதைக் காண்கிறேன். எனக்கு, எனக்கு உங்களைத் தெரியும். இல்லை, அது உங்களுக்காக அல்ல. அது அந்த குழந்தைக்காக, அந்த குழந்தை உங்கள் கொள்ளுப் பேரன் (great-grandson). அவனை என் ஜீவியத்தில் ஒருபோதும் நான் கண்டதில்லை. அது உண்மை. அந்தக் குழந்தை கண் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கிருந்த ஒரு ஒவ்வாமை தான் அதற்குக் காரணம். அது கர்த்தர் உரைக் கிறதாவது. நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்! 168. சீமாட்டியே, நீங்கள் மிகவும் நோய் வாய்ப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள், உங்களுக்கு வயிற்றுக்கோளாறு இருக்கிறது, அநேகமாக பெரும் மனவுளைச் சலில் இருக்கிறீர்கள். தேவன் உங்களைக் குணப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? மேரி, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவா சியுங்கள், உங்கள் வாஞ்சையை இயேசு கிறிஸ்து உங்களுக்கு அருளுவார். அவர் உங்கள் மடியில் இருக்கிறார்! 169. இங்கே ஒரு சிறிய பெண் உட்கார்ந்து, ஜெபித்துகொண்டிருக்கிறாள், அவள் என்னை நோக்கிப்பார்த்து, தலையைத் தாழ்த்துகிறாள். எழுந்து என்னை நோக்கிப்பார். நல்லவள். நீ இங்கிருந்து வரவில்லை. நீ தூரத்திலிருந்து, நியூயார்க்கிலிருந்து வந்திருக்கிறாய். ஆனால் இயேசு கிறிஸ்து அதைச் சுகப்படுத்துகிறவர் என்று நீ விசுவாசிப்பாயானால், அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை உனக்குக் கொடுப் பார். நீ அதை விசுவாசிக்கிறாயா? நியூயார்க் கைச் சேர்ந்த திருமதி. பிரையன், உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, அப்போது சரியாக இப்பொழுதே நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளலாம். "170. இது உங்கள் மடியில் உள்ளது, நண்பர்களே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர் களா, வார்த்தையானது தன்னை வெளிப்படுத் திக் காண்பிக்கிறது என்பதை விசுவாசிக்கிறீர் களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவா சிக்கிறீர்களா? இந்த ஜனங்களை எனக்குத் தெரி யாது. தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருக்கிறார், இந்த ஜனங்களை நான் அறியேன். இயேசு கிறிஸ்துவோ இவர்களை அறிந்திருக் கிறார். ""சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரனின் வருகையிலும் நடக்கும்"" என்று அவர் கூறியிருக்க, இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தப் பாகம் உண்மை என்றால், நான் பிரசங்கிக்கும் செய்தியும் உண்மைதானே. அது சரிதான் என்று பரிசுத்த ஆவியானவர் தாமே, தம்முடைய சொந்த வியாக்கியானத்தை (Its Own interpreting) செய்துகொண்டிருப்பதே இதுவாகும். ஆமென். அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்! நீங்கள் அதைச் செய்வீர்களா? " 171. அப்படியானால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் கால்களை ஊன்றி எழுந்து நின்று, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 172. பரிசுத்த ஆவி இங்கே இருக்கும் போது, நான் இங்கே இந்த கைக்குட்டைகள் மேல் கைகளை வைக்க விரும்புகிறேன். கிறிஸ்துவை நோக்கி நம்முடைய கரங்களைஉயர்த்துவோமாக. 173. கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். நீரே சத்தியம், ஒளி, வார்த்தை என்று நாங்கள் அறிந்திருக் கிறோம். நான் இந்த கைக்குட்டைகளின் மீது என் கரங்களை வைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வல்லமை இந்த கட்டிடத்தினூடாகவும், இந்தக் கைக்குட்டைகளி னூடாகவும், இந்த சிறிய கோட்டுகள் மற்றும் தளர்ச்சியான மேலங்கிகள் மேலும் சூழ்ந்து கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள்மேல் வருவாராக. இதை அருளும். அவர்கள் தாமே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக, ஏனென்றால் உம்முடைய வார்த்தையே சத்தியமாயுள்ளது. இதை அருளும், கர்த்தாவே. 174. இப்போது சபையிலுள்ள ஒவ்வொரு வரிடமும் தான், கிறிஸ்து என்னப்பட்ட இந்த இயேசுவை நீங்கள் என்ன செய்வீர்கள்? அது உங்கள் கரத்தில் உள்ளது. என்று ஜனங்கள் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள். இந்த ஒலிநாடாவிலுள்ள ஜனங்களை, இங்கே கேட்டுக்கொண்டிருக்கும் ஜனங்களை தான் பொருட்படுத்திக் கூறுகிறேன், இன்று நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? இங்குள்ள ஒவ் வொரு நோயாளியும், நீங்கள் ஏன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது? இங்குள்ள ஒவ் வொரு சந்தேகப்படும் மனிதனும், சந்தேகிக்கும் ஒவ்வொரு பெண்ணும், நீங்கள் ஏன் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள கூடாது? நீங்கள் அவரை ஒருபோதும் உங்கள் கையை விட்டு கழுவிப்போட மாட்டீர்கள். உங்கள் கோட்பாடு ஒருபோதும் அவரை எடுத்துப் போடாது. அதை நீக்கிப்போட தேசத்தில் போதுமான வண்ணாருடைய சோப்பு கிடை யாது. ஒரே ஒரு காரியத்தைத் தான் உங்களால் செய்ய முடியும், அவரை உங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்! ஆமென். நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்தி... என்று கூறுங்கள். அவ ருக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங் கள். 175. பரலோகப் பிதாவே, இவர்கள் உம் முடையவர்கள். உம்முடைய வார்த்தை அடை யாளம் காணப்பட்டு விட்டது. இந்த ஜனங்கள் உம்முடையவர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத் தில், நான் இவர்களை உம்மிடம் ஒப்புவிக் கிறேன். ஆமென். 176. இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி அவரைத் துதியுங்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நான் அவரை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்.